ETV Bharat / state

தஞ்சையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; அண்ணாமலை கண்டனம்! - Thanjavur Gang Sexual assault - THANJAVUR GANG SEXUAL ASSAULT

Thanjavur Gang Rape: தஞ்சையில் பட்டதாரி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 7:42 PM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பட்டதாரி இளம்பெண்னை தனிமையில் வரவழைத்த 25 வயது நபர் ஒருவர், 26 மற்றும் 20 வயது நண்பர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் உடன் சேர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

இதனால் டைந்த இளம்பெண் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஒரு சிறுவன் உள்பட நான்கு பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட கொட்டகை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதால், தடயங்களை அழிப்பதற்காக எரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

திமுகவைச் சேர்ந்த, உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது. தமிழகம் முழுவதும் பெருகியிருக்கும் போதைக் கலாச்சாரம், பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கூட்டுப் பாலியல் பலாத்காரம் போன்ற மிக மோசமான குற்றம் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த இயலாமல், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல், தமிழகக் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போதைப் பொருள் புழக்கத்திற்கும், ஆளுங்கட்சியினர் என்பதற்காகக் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், ஒரு சமூகமாக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிகப் பெரியது என்பதை முதலமைச்சர் எப்போது உணர்வார்?” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.