ETV Bharat / state

தூத்துக்குடி கோரம்பள்ளம் பாலம் பாதிப்பு..அன்புமணி ராமதாஸ் ஆய்வு! - Anbumani Ramadoss - ANBUMANI RAMADOSS

தூத்துக்குடியை அடுத்த அந்தோனியார்புரம் பகுதியில் கோரம்பள்ளம் குளத்துக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 11:03 PM IST

தூத்துக்குடி: கன்னியாகுமரி-காஷ்மீர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையுடன், தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், நெல்லையிலிருந்து தூத்துக்குடி வரை 47.250 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ. 349.50 கோடியில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பணிகள், கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2013ல் முடிக்கப்பட்டு வாகன போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. இதேபோன்று நான்கு வழிச்சாலையின் குறுக்கே உள்ள ஓடை கால்வாய் மீதும் பாலங்கள் அமைக்கப்பட்டன. மேலும், தூத்துக்குடியை அடுத்த அந்தோனியார்புரம் பகுதியில் கோரம்பள்ளம் குளத்துக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டது. போக்குவரத்து அதிகம் கொண்ட இந்த சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிக கன மழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்தோனியார்புரத்தில் நான்கு வழிச்சாலையில் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், 2 நாட்களாக சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அதன் பின்னர், தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனினும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளுக்கு உள்ளாகின்றன.

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி , திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்வதற்க்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது, விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்செந்தூர் செல்லும் வழியில், இந்த பாலத்தை பார்வையிட்டு ஏன் இவ்வாறு பாலத்தை போட்டு வைத்திருக்கின்றார்கள்? இதன் நிலை என்ன? என கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி செளமியா அன்புமணி ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, திருச்செந்தூரில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்துள்ளார். அப்போது அவர் வரும் வழியில் சேதமடைந்த பாலத்தை கண்டு தனது வாகனத்தை நிறுத்தி பாலத்தின் நிலை குறித்து அப்பகுதி மக்களிடமும், வாகன ஒட்டிகளிடமும் கேட்டறிந்தார்.

அதில் பொதுமக்கள், “இந்த பாலம் எட்டு மாதம் காலம் ஆகியும் கட்டி கொடுக்கப்படவில்லை. பால்த்தின் வேலை துவங்கப்படவில்லை. கட்டி முடிப்பார்களா? இல்லையா? என்று தெரியவில்லை” என்று வேதனையுடன் கூறியுள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் எடுத்துரைத்து பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன் அப்பகுதி பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் குமுறல்களை செய்தியாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “ஏன் மோதுற மாதிரி வந்தீங்க?”.. கண்மூடித்தனமாக அடித்த போதை கும்பல்.. திருவாரூரில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.