ETV Bharat / state

மத்திய அரசு இதை புரிந்துகொள்ள வேண்டும்.. கல்வி நிதி விவகாரத்தில் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்! - Minister Anbil Mahesh on Fund - MINISTER ANBIL MAHESH ON FUND

Anbil Mahesh on Educational Fund Delay: 573 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது, இதனால் மாணவர்களுடைய கல்வி சார்ந்த விஷயம் பாதிக்கப்படுவதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 4:15 PM IST

திருச்சி: திமுக முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “மத்திய அரசிடம் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த ஜூன் மாதம் வரை 573 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது. அவை தற்போது வரை வரவில்லை.

இது தொடர்பாக திமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம். 60 முதல் 40% வரை கல்விக்கான நிதியை மத்திய அரசு எப்போதும் நிறுத்தி விடக்கூடாது. பல லட்சம் மாணவர்களுடைய கல்வி சார்ந்த விஷயம் இது. இதில் நீங்கள் அரசியல் செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை இது குறித்து கடிதம் எழுதி இருக்கிறோம். அதற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எம்பிக்கள் வலியுறுத்தினர். கூட்டத்தொடர் முடிந்து, தற்போது எவ்வளவு நாட்கள் ஆகியும் நிதி வராமல் இருக்கிறது. இவற்றை வலியுறுத்தி நேற்று கூட முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு முன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

573 கோடி மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு வர வேண்டிய 249 கோடியும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் வந்தால் மட்டுமே இந்த நிதி உடனே கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே மாநிலங்கள் முடிவெடுப்பதற்கும் இதில் உரிமை உள்ளது. ஆனால், அதை விட்டுவிட்டு
புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என அழுத்தம் தருவது நியாயம் இல்லை.

பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அதை மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையே மறந்து விடுகிறார்கள். கொள்கை என்பது விவாதம் சார்ந்தவை. அதற்காக நிதியை நிறுத்துவது நியாயம் அல்ல. ஜிஎஸ்டியில் இருந்து அனைத்து தொகையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதிச்சுமையில் தமிழக அரசு சமாளித்துக் கொண்டிருக்கிறோம்.

அதே போன்றுதான் கல்விக்கான நிதிச் சுமையும் சமாளிக்கப் போகிறோம். தமிழகத்தில் கடுமையான நிதிச் சுமைகள் வந்தாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த அரசும், தமிழக முதலமைச்சரும் செய்வார்” என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தாமதமாகும் ‘சமக்ரா சிக்ஷா’ கல்வி நிதி; பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.