ETV Bharat / state

மதுரைக்கு ரயில் மூலம் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்திய முதியவர் கைது! - madurai railway junction - MADURAI RAILWAY JUNCTION

Smuggled Drugs: விசாகப்பட்டினத்திலிருந்து மதுரைக்கு ரயில் மூலம் ரூ.4.20 லட்சம் மதிப்புடைய போதைப் பொருள்கள் கடத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Smuggled Drugs
Smuggled Drugs
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 9:49 PM IST

Updated : Apr 10, 2024, 11:06 PM IST

மதுரை: மதுரை ரயில் நிலையத்திற்கு இன்று(ஏப்.10) அதிகாலை ஹவுரா முதல் கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது அங்குச் சந்தேகத்துக்குரிய வகையில் தென்பட்ட உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பு (70) என்பவரை போலீசார் விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில், அவர் கொண்டு வந்த இரண்டு பைகளில் போதைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த நபரைக் கைது செய்து அவரிடமிருந்த போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், விசாகப்பட்டினத்திலிருந்து மதுரைக்குப் போதைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போதைப்பொருள்களை பறிமுதல் செய்த போலீசார் அதன் மதிப்பு ரூ.4.20 லட்சம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுப்பு மீது ஏற்கனவே வெளி மாநிலங்களிலிருந்து போதைப்பொருள்கள் கடத்தி வரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கு போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விசாரணை கைதி உயிரிழப்பு - உடற்கூறு ஆய்வில் வெளிவந்த உண்மை..! - Prisoner Death In Madurai

Last Updated : Apr 10, 2024, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.