ETV Bharat / state

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு உறுதிமொழி படிவம் வெளியீடு! - விஜய்

Tamilaga vetri Kazhagam: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு 'மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் சேவையாற்றுவோம். சாதி மத பேதமின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவோம்' என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அடங்கிய உறுதிமொழி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 2:15 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கான உறுதிமொழி ஏற்புப் படிவம் இன்று (பிப்.19) வெளியிடப்பட்டுள்ளது. பிப்.2ஆம் தேதி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வழங்கியப் பின்னர், அக்கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடப்படும் என நடிகரும் அக்கட்சியின் நிறுவனத் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், அக்கட்சியின் தலைவர் விஜயின் உத்தரவின் படி, உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று நடந்தது. அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்காக உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டது.

அதில், நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேனியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சியினர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.