ETV Bharat / state

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.. தேனி தொகுதிக்கான முக்கிய அறிவிப்புகள் என்ன? - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

AMMK Election Manifesto: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

AMMK Election Manifesto
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குறுதியை வெளியிட்டது அமமுக
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 9:35 PM IST

தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அமமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை:

  • தேனியில் மத்திய பல்கலைக்கழகம், ஐஐடி பயிற்சி நிறுவனம், பிஎம் ஸ்ரீ (PM SHRI) மற்றும் நவோதயா பள்ளிகள் சோழவந்தான் மற்றும் கடமலை பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • கேந்திரிய வித்யாலயா பள்ளியை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
  • தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திண்டுக்கல் - சபரிமலை வரையிலான ரயில் பாதை, சென்னை - போடிக்கு தினசரி ரயில் சேவை, உசிலம்பட்டி புறவழிச்சாலை எனப் போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • மத்திய அரசின் நிதி உதவியோடு வைகை அணை முறையாகத் தூர்வாரப்படுவதோடு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.
  • கடந்த 1984ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டிபட்டி தெப்பம் பட்டி திப்பரேவு அணை திட்டம் செயல்படுத்த மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், தேவைக்கு ஏற்ப புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.
  • உலகப் புகழ்பெற்ற வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தங்கும் வசதியுடன் கூடிய புதிய அரங்கம், நீண்ட காலமாக குடமுழுக்கு நடத்தப்படாமல் இருக்கும் கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வைகை அணை பூங்கா, சோத்துப்பாறை, மஞ்சளாறு கும்பக்கரை, தேக்கடி மேகமலை, சின்ன சுருளி எனத் தேனியில் முக்கியமான இடங்கள் மேம்படுத்தப்பட்டுச் சிறந்த சுற்றுலா தளங்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • கொரோனா காலகட்டத்தில் விவசாயிகள் பெற்ற வங்கிக் கடன்களுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அடுக்கத்திற்கும், ஈச்சமலைக்கும் இடையே உள்ள வவ்வால் துறையில் புதிய அணை கட்டி எண்டப்புலி பஞ்சாயத்தில் உள்ள சுமார் 3000 ஏக்கர் பாசன வசதி பெறவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை வேண்டும்.
  • ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் முழுமையாக மீட்கப்பட்டு முறையாகத் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • மா மற்றும் தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கவும், திராட்சை, ஏலக்காய்க்கு விவசாயிகளின் ஆலோசனையைப் பெற்று அதற்குரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • முழு மானியத்துடன் கூடிய இயற்கை உரங்கள் விநியோகம் செய்யத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.
  • முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரை ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சோழவந்தான் உட்பட நீர் உற்பத்தியாகும் இடங்களில் தடுப்பணைகள் கட்டி விவசாயிகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு உரிய அரசாணை பிறப்பித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது உறுதி செய்யப்படும்.
  • பெரியகுளம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் பகுதியில் மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டியில் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் நெசவாளர் பூங்கா அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி விரைவில் நெசவாளர் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடங்கப்படும் புதிய தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு மூலம் கடனுதவி பற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • உத்தம பாளையம், சின்னமனூர் பகுதியில் மல்லிகைப்பூ விவசாயிகள் பயப்படுவார்கள் வாசனைத் திரவிய தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழகம் கேரளா எல்லைப் பகுதியில் உள்ள கண்ணகி கோயிலுக்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பாண்டியன் மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சோழவந்தானில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மத்திய அரசின் உதவியோடு தேனியில் சித்தா, ஆயுர்வேத கல்லூரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அனைத்து கிராமங்களிலும் சுத்தமான குடிநீர், பேருந்து வசதி, சாலை வசதி, கழிப்பறைகள், திட்டக் கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
  • மேகமலை பகுதிகளில் பூர்வ குடிகளாக வாழ்ந்து வரும் 18 கிராம மக்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையின் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டு மத்திய அரசின் உதவியுடன் அவர்கள் அங்கே வசிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: தமிழர்களை புறந்தள்ளும் பாஜகவுக்கு தேர்தலில் தக்கப்பாடம் புகட்டப்படும்: செல்வப்பெருந்தகை கருத்து - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.