சென்னை: சென்னை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சிவா(34). இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று சிவா மதுபோதையில் சென்னை தீவுத்திடல் எதிரே உள்ள பகுதியில் சாலையோரம் பிளாட் பாரத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் சிவாவை கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார் காயமடைந்த சிவாவை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பெயிண்ட்ர் சின்னதம்பி என்கிற அப்பு ராஜ் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், அப்புராஜுக்கு திருமணமாகி மனைவி சித்ரா மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருவது தெரிய வந்தது. மேலும், அப்புராஜ் மனைவி சித்ராவும் கொலை செய்யப்பட்ட சிவாவும் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்த நிலையில், சித்ரா சிவாவுடன் நெருக்கமாக இருந்ததை அப்புராஜ் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்த அப்புராஜ் இருவரிடம் சண்டையிட்டத்தால் மனைவி சித்ரா கோபித்து கொண்டு தீவுத்திடல் சாலையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து அப்புராஜ் மதுபோதையில் தனது மாமியார் வீட்டிற்கு வந்து மனைவி சித்ராவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரது காதை கடித்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சித்ரா ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அப்புராஜ் தீவுத்திடல் பகுதியில் உள்ள ஃபிளாட் பாரத்தில் தூங்கி கொண்டிருந்த சிவாவை கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அப்புராஜை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தீவுத்திடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கல்யாணி ராணி சத்யா புதுச்சேரியில் கைது.. 12 ஆண்களை ஏமாற்றி பணம் பறித்தது அம்பலம்!