ETV Bharat / state

இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா; கீழடி அகழாய்வை முன்னெடுத்தவர்! - Archaeology

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 5:35 PM IST

Director of Archaeology : தமிழகத்தில் கீழடி அகழாய்வை முன்னெடுத்து அதனை உலகம் போற்றும் வகையில் வெளிக்கொணர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கீழடி அகழாய்வு, அமர்நாத் ராமகிருஷ்ணா
கீழடி அகழாய்வு, அமர்நாத் ராமகிருஷ்ணா (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை : கீழடியில் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கிய இந்திய தொல்லியல் துறையின் அகழாய்வுப் பணியில், தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி, மிகச் சிறப்பிற்குரிய வகையில் தமிழர்தம் பண்டைய நாகரிகத்தை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணா.

இவர் இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வில் முதல் 2 கட்டம் இவரது தலைமையில் நடைபெற்றது. இவரது தலைமையிலான குழுவினர் தான் கீழடியில் பண்டைய காலத்தில் நிலவிய நகர நாகரீகத்தை வெளிக்கொணர்ந்தது.

மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களை வெளிக்கொணர்ந்தார். தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானையோடுகள் கண்டறியப்பட்டன. மேலும், உறை கிணறுகள், மட்கலன்கள், சூது, பவள மணிகள் ஆகியவை கண்டறியப்பட்டன.

கீழடி 2ம் கட்ட அகழாய்வின் போது தான் மிக நீண்ட குழி ஒன்றில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், தொல்லியல் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அந்த அகழாய்வே கீழடியின் நிலவிய பண்டைய நகர நாகரீகத்திற்கு சான்றாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டலத்தின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்திய தொல்லியல் துறையின் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தனது பணியை அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மாணவர்களே மெயில் அனுப்பியது அம்பலம்...ஈரோட்டில் பரபரப்பு..! - erode school bomb threat

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.