ETV Bharat / state

இன்சூரன்ஸுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்குக.. காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தல்! - GST ON INSURANCE ISSUE - GST ON INSURANCE ISSUE

Insurance Employees Association: காப்பீட்டிற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை திரும்பப் பெறும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பு இணைச் செயலாளர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பு இணை செயலாளர் ரமேஷ் குமார்
தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பு இணைச் செயலாளர் ரமேஷ் குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 4:16 PM IST

Updated : Aug 24, 2024, 4:26 PM IST

சேலம்: காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் 34வது பொது மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம், சேலம் ஐந்து சாலை சந்திப்பு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.

தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பு இணை செயலாளர் ரமேஷ் குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த கூட்டத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு மத்திய அரசு சார்பில் விதிக்கப்படும் ஜிஎஸ்டியால் பொதுமக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. இதனால் மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அவற்றின் வளர்ச்சியில் தடை ஏற்படும். எனவே, தங்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்று ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பு இணைச் செயலாளர் ரமேஷ் குமார் கூறுகையில், “மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நான்கு காப்பீட்டு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தை பாதுகாத்திட மத்திய அரசு சிறந்த திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இவற்றை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு வரி விதிப்பை நீக்கவில்லை என்றால், காப்பீட்டுக் கழக ஊழியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits-ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருச்செங்கோடு சிறுமி கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Last Updated : Aug 24, 2024, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.