ETV Bharat / state

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி .. மே 22-ல் தொடக்கம்! - All India Basketball Tournament - ALL INDIA BASKETBALL TOURNAMENT

All India Basketball Tournament: கரூரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி மே 22 முதல் மே 27 வரை நடைபெறுகிறது.

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் விஎன்சி பாஸ்கரின் புகைப்படம்
கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் விஎன்சி பாஸ்கரின் புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 9:10 PM IST

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் விஎன்சி பாஸ்கரின் பேட்டி (Credit: ETV Bharat Tamilnadu)

கரூர்: கரூர் கூடைப்பந்து குழு இணைந்து நடத்தும் LR.G நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 64ஆம் ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும், KVB சுழற்கோப்பைக்கான 10ஆம் ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மே 22 முதல் மே 27 வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், இதற்கான செய்தியாளர் சந்திப்பு கரூர் ஹேமலா ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது பேசிய கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் விஎன்சி பாஸ்கர், "ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் முதல் இடம் பெறுபவர்களுக்கு LR.G நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

அதேபோல், இரண்டாவது இடம் பிடிப்பவர்களுக்கு LG.வரதராஜு நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.80 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. மேலும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.60 ஆயிரம் பிரிசுத் தொகையும், நான்காம் இடம் பிடிப்பவர்களுக்கு M.R.பழனிசாமி நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியினை 3,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் அகில இந்திய அளவில் தலைசிறந்த 8 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் கலந்து கொள்கின்றனர்.

ஆண்கள் போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையிலும், பெண்கள் போட்டிகள் லீக் முறையிலும் நடைபெறுகிறது. வருகிற மே 22ஆம் தேதி துவக்க நாள் நிகழ்ச்சியில், தமிழ்நாடு கையுந்து பந்து கழகத்தின் பொதுச் செயலாளர் மார்ட்டின் சுதாகர் மற்றும் கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்க உள்ளனர்.

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் 78 ஆண் வீரர்களும், 37 பெண் வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களில் 18 இண்டர்நேஷனல் வீரர்களும், 57 தேசிய அளவிலான வீரர்களும், 10 சர்வீஸ் அளவிலான வீரர்களும், 14 மாநில அளவிலான வீரர்களும், 16 ரயில்வே அளவிலான வீரர்களும் கலந்து கொள்கின்றனர். முதல்முறையாக, கரூர் கூடைப்பந்து குழுவிற்கு கரூர் பேஸ்கட்பால் கிளப் எனும் மொபைல் செயலி மூலம் போட்டிகள் குறித்தான விளையாட்டு செய்திகள் அனைத்தும் பதிவு செய்யப்படவுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கா? - சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு - SAVUKKU SHANKAR ISSUE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.