ETV Bharat / state

'என்னடா லுக்கு, யாரை பார்த்து சிரிக்கிற' மதுபோதையில் மல்லு கட்டிய இளைஞர்கள்! - youngsters fight in tirupattur - YOUNGSTERS FIGHT IN TIRUPATTUR

YOUNGSTERS FIGHT IN TIRUPATTUR: ஜோலார்பேட்டை அருகில் சிக்கன் ரைஸ் கடைக்கு மதுபோதையில் 3 நபர்கள், 17 வயது சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

youngsters fight photo
இளைஞர்கள் சண்டையிட்டு கொண்ட புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 8:50 PM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே உள்ள சிக்கன் ரைஸ் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிர்தோஷ்(19), சாய்பாபா நகர் பகுதியைச் சேர்ந்த ரோஹித் ரவிச்சந்திரன்(19) மற்றும் அய்யத் நகர் பகுதியைச் சேர்ந்த சாய் பிரசாத்(19) ஆகிய மூவரும் அதே சிக்கன் ரைஸ் கடைக்கு மது போதையில் வந்துள்ளனர்.

அப்போது, அந்த 17 வயது சிறுவனிடம் பார்த்து மதுபோதையிலிருந்த மூவரும் 'என்னடா லுக்கு யாரை பார்த்து சிரிக்கிறாய்' எனக் கூறி அச்சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக 17 வயது சிறுவன், தனது மாமாவான விஜி என்பவருக்குத் தகவல் தெரிவிக்கச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஜி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மது போதையிலிருந்த மூன்று பேரையும் சார மரியாக நடுரோட்டில் அடித்து துவம்சம் செய்தனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அப்பகுதியினர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஜோலார்பேட்டை போலீசார் மதுபோதையிலிருந்த மூன்று பேர் மற்றும் அதே போல் 17 வயது சிறுவனின் குடும்பத்தினரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கன் ரைஸ் கடையில் 'என்னடா லுக்கு' என கேட்டு சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த விபத்தில் வட மாநில ஊழியர் உட்பட இருவர் உயிரிழப்பு! - TAMILNADU ACCIDENT

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.