ETV Bharat / state

ஆலங்குடியில் இருதரப்பு மோதல்.. படுகாயமடைந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி வந்து புகார்! - போலீசார் நடவடிக்கை

Mayiladuthurai news: ஆலங்குடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் நடவடிக்கை எடுக்காததாகக் கூறி, படுகாயமடைந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Alangudi bilateral conflict issue
ஆலங்குடி இருதரப்பு மோதல் விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 1:34 PM IST

ஆலங்குடி இருதரப்பு மோதல் விவகாரம்

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆலங்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 17ஆம் தேதி காணும் பொங்கல் அன்று, ஊர் சார்பில் தமிழ்செல்வன் உள்ளிட்ட இளைஞர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உள்ளனர்.

அப்போது ஊர் வரி வைத்து விஷேசம் நடத்தவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், ஊர் நாட்டாமையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ரேடியோ போட்டால் தகராறு வரும் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த பிரச்னை தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கட்டை, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தமிழ்செல்வன் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழ்செல்வன் தரப்பைச் சேர்ந்த தாஸ், செல்வபிரகாஷ், ஜெய்காந்த், ஜெயகுமார், மோகன், கலைவேந்தன் ஆகியோர் மீதும், ராமச்சந்திரன் தரப்பைச் சேர்ந்த நவகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கரிகாலன், சரத்குமார், பாலா உள்ளிட்ட இரு தரப்பினர் மீதும் குத்தாலம் போலீசார் 147, 294 (b), 324, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ராமச்சந்திரன் தரப்பினர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். நவகிருஷ்ணன் என்பவர் வெட்டியதால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்செல்வன், உடல்நலம் குணமடையாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகக் கூறிய தமிழ்செல்வனின் மனைவி சங்கீதா மற்றும் அவரின் உறவினர்கள், அவரை ஆம்புலன்சில் ஏற்றி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு, தமிழ்செல்வன் ஆபத்தான நிலையில் சிகிக்சை பெற்று வருவதாகவும், போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, தமிழ்செல்வனை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், கூலி வேலை செய்யும் தமிழ்செல்வனுக்கு, மருத்துவ சிகிச்சையளிக்க எதிர் தரப்பினரிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றும் கூறி புகார் அளித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தமிழ்செல்வனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கான காலணி கணக்கெடுப்பு பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.