ETV Bharat / state

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! - Airport bomb threat issue

Chennai Airport bomb threat E-Mail: சென்னை விமான நிலையத்தில் இன்னும் ஒரு வாரத்தில் குண்டு வெடிக்கும் அபாயம் உள்ளது என தனியார் விமான நிறுவனத்துக்கு இ-மெயில் வந்துள்ள சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும் புகைப்படம்
சென்னை விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 11:10 AM IST

சென்னை: சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவன அலுவலகத்திற்கும், 2 தனியார் அலுவலகங்களுக்கும் இ-மெயில் மூலமாக, நேற்று மர்ம நபரிடம் இருந்து குண்டு வெடிப்பு மிரட்டல் தொடர்பான தகவல் வந்துள்ளது. அந்த மிரட்டல் தகவலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன எனவும், அவைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்ததுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த தனியார் நிறுவனங்கள், உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு, இ-மெயில் தகவல்களை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய இயக்குநர் தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அதிகாரிகள் அந்த தகவல்களை ஆய்வு செய்தபோது, போலியான மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்த இச்சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதோடு விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கும், இந்த மிரட்டல் குறித்து தகவல் தெரிவித்து கூடுதல் பாதுகாப்புகளை செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவிலிருந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் பயணிக்க வரும் பயணிகளில் சந்தேகப்படும்படியான பயணிகளை நிறுத்தி, அவர்களது உடைமைகளை மீண்டும் ஒரு முறை பரிசோதித்து அதன் பின்னரே அனுப்புகின்றனர். அதோடு, சென்னை விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதிகளில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்படும் வாகனத்தையும் சோதனை செய்கின்றனர்.

மேலும், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் அனுப்பக் கொண்டுவரும் பார்சல்கள் அனைத்தையும் தீவிரமாக கண்காணித்து, சோதனை செய்து வருகின்றனர். இதற்கிடையே, போலீசார் இந்த இணையதள தகவல்களை ஆய்வு செய்ததோடு, இந்த மெயில் எந்த இ-மெயில் ஐடியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது யார் என்று ஆராய்ந்தனர்.

அந்த ஆய்வில், மர்ம நபர் யாரோ போலியான 2 மெயில் ஐடிகள் உருவாக்கி அதன் மூலம் இந்த மிரட்டல் தகவல்களை அனுப்பியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது, இந்த போலியான மெயில் ஐடியை உருவாக்கி, அதன் மூலம் இந்த மிரட்டல் தகவல்களை அனுப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்று, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனைக்குப் பின்பு அறிவித்துள்ளனர். ஆனாலும், ஒரு வாரத்தில் வெடிக்கும் என்று, அந்த மிரட்டல் தகவலில் இருப்பதால் சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பலி.. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.