ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தல் 2024: 18 தொகுதிகளில் நேரடியாக மல்லுக்கட்டும் திமுக - அதிமுக.. முக்கிய புள்ளிகள் யார் யார்? - admk vs dmk candidates - ADMK VS DMK CANDIDATES

lok sabha poll 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. இதில் தென் சென்னை, வட சென்னை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 1:34 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல் அதிமுக கூட்டணியில் தலைமை வகிக்கும் அதிமுக 33 தொகுதிகளுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பணிகளை தொடங்கியுள்ளது. பாஜக கூட்டணி இன்னும் தொகுதி பங்கீட்டையே இறுதி செய்யாமல் உள்ளது.

இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் அடிப்படையில் அதிமுகவும், திமுகவும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதவுள்ளது.

வ.எண்தொகுதிதிமுக வேட்பாளர்கள்அதிமுக வேட்பாளர்கள்
1வட சென்னைகலாநிதி வீராசாமிராயபுரம் மனோ
2தென் சென்னைதமிழச்சி தங்கபாண்டியன்டாக்டர் ஜெயவர்தன்
3ஸ்ரீபெரும்புதூர்டி.ஆர்.பாலுடாக்டர் பிரேம் குமார்
4காஞ்சிபுரம்(தனி)வழக்கறிஞர் செல்வம்ராஜசேகர்
5அரக்கோணம்ஜெகத்ரட்சகன்ஏ.எல்.விஜயன்
6வேலூர்கதிர் ஆனந்த்டாக்டர் எஸ்.பசுபதி
7தருமபுரிஆ.மணிடாக்டர் அசோகன்
8திருவண்ணாமலைசி.என்.அண்ணாதுரைகலியபெருமாள்
9ஆரணிதரணி வேந்தன்கஜேந்திரன்
10கள்ளக்குறிச்சிமலையரசன்குமரகுரு
11சேலம்டி.எம்.செல்வகணபதிவிக்னேஷ்
12ஈரோடுகே.இ.பிரகாஷ்ஆற்றல் அசோக் குமார்
13நீலகிரி(தனி)ஆ.ராசாலோகேஷ் தமிழ்செல்வன்
14கோயம்புத்தூர்கணபதி பி.ராஜ்குமார்சிங்கை ராமச்சந்திரன்
15பொள்ளாச்சிஈஸ்வரசாமிகார்த்திக் அப்புசாமி
16பெரம்பலூர்அருண் நேருசந்திரமோகன்
17தேனிதங்க தமிழ்ச்செல்வன்டாக்டர் நாராயணசாமி
18தூத்துக்குடிகனிமொழி கருணாநிதிசிவசாமி வேலுசாமி

இதில், வட சென்னை, தென் சென்னை, நீலகிரி, தூத்துக்குடி, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், உள்ளிட்ட தொகுதிகள் முக்கிய புள்ளிகள் போட்டியிடும் தொகுதிகள் என்பதால் அதிக கவனம் பெற்றுள்ளன.

இரட்டை இலை vs கை: அதேபோல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய ஏழு தொகுதிகளில் அதிமுக நேரடியாக எதிர்கொள்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.