ETV Bharat / state

"விஜய் மாநாட்டில் கூட்டம் சேர உதயநிதி தான் காரணம்" - ஆர்.பி.உதயகுமார் கூறிய விளக்கம் என்ன? - RB UDHAYAKUMAR ON TVK MAANAADU

தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்க போகிறது என அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆர்.பி உதயகுமார் , த.வெ.க தலைவர் விஜய்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆர்.பி உதயகுமார் , த.வெ.க தலைவர் விஜய் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 9:30 PM IST

மதுரை: இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார். இந்நிலையில் அதிமுக அம்மா பேரவை சார்பில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனையை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கமாக அமைந்துள்ளது. இளைஞர் சமுதாயம் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை என விஜய்யின் மாநாட்டு வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் விஜய்யின் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர்.

ஆர்.பி உதயகுமார் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: திராவிட மாடலை சீண்டிய விஜய்.. அமைச்சர் சேகர் பாபு கொடுத்த பதில்..!

தமிழ்நாட்டு மக்கள் வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை. தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆரை சுட்டிக் காட்டி பேசியதை அதிமுக வரவேற்கிறது. திமுகவை தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு தவெக மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது.

சபரீசனை பார்க்காமல் தமிழகத்தில் யாரும் தொழில் தொடங்க முடியாத சூழல் உள்ளது. தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை. ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும். தவெக கொள்கைகள் வரவேற்கதக்கது.

அதிமுகவின் 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அதிமுக மக்களின் நிரந்தர வாக்கு வங்கியை கொண்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இளைஞர் சமுதாயம் கொதித்து போய் விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர்" என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.