ETV Bharat / state

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு கோரிய முதல்வர்.. நெகிழ்ந்த சபாநாயகர்.. ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட்! - aiadmk mlas suspended

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 12:26 PM IST

tamil nadu assembly session: சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் இன்று ஒரு நாள் மட்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (credit - Etv Bharat Tamil Nadu)

சென்னை: தமிழக சட்டபேரவையில் இன்றைய கூட்டம் கூடியது. கூடிய உடனேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து பேச அனுமதி கோரி தொடர் அமளியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள் அவை மாண்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கேள்வி நேரம் முடிந்ததும் வாய்பளிப்பதாகவும் கூறினார். மேலும், எதிர்கட்சியினர் பேசுவது அவை குறிப்பில் ஏறாது எனவும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்தனர். அப்போது, குறுகிட்டு பேசிய சபாநாயகர் ''இது ஒன்றும் பொது கூட்டம் கிடையாது'' எனக்கூறி சபை காவலர்களுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பேரவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், '' ''அதிமுகவினர் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் திமுகவின் வெற்றியை மறைப்பதற்காக ஒரு நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் அவை தலைவர் எழுந்து பேச முற்படும் போது எங்களிடம் பேச கூட மாட்டார். நீங்களாவது அவர்களைப் பார்த்து பேசுகிறீர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு நியாயமாக இந்த சபையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்''.

''நீங்கள் சொல்வதைக் கேட்காமல் அவையில் குழப்பம் ஏற்படுத்தி வெளியேறுகின்றனர். முதலமைச்சர் அழைத்த போதும் மீண்டும் அதே தவறை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கு நன்றாக தெரியும். எள்முனை அளவு கூட அவர்களிடம் ஜனநாயகம் இருக்காது. இன்றைக்கு ஜனநாயகத்தோடு நடக்கின்ற இந்த அவையை அதிமுகவினர் சீர் கெடுக்க முற்பட்ட காரணத்தால் பேரவையின் அலுவலை நடைபெறாமல் இடைமறித்தும், பேரவையின் விதிகளுக்கு மாறாக அவையில் குந்தகம் செய்து வருவதாலும், பேரவை விதி 121 ( 2 ) ன் படி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டத்தொடர் முழுவதுமாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிகிறேன்'' என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''கூட்டத்தொடர் முழுவதும் வேண்டாம் இன்று ஒரு நாள் மட்டும் போதும் மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்'' என கோரினார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு, ''அவைக்கு குந்தகம் விளைவித்ததால், கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய இருந்ததை முதல்வர் பெருந்தன்மையோடு ஒரு நாள் மட்டும் போதும் என கோரியதன் அடிப்படையில் இன்று ஒரு நாள் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்க கூடாது'' என்ற தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றபட்டது.

இதையும் படிங்க: கருணாநிதியின் பெயரில் புதிய விருது.. சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.