ETV Bharat / state

"தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக சொதப்பியுள்ளது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு! - Election Commission of India

Former Minister Jayakumar: இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் சொத்தப்பிவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை
சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 6:14 PM IST

"தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக சொதப்பி உள்ளது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: சென்னையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று (ஏப்.23) சென்னை அதிமுக தலைமை அலுவகத்தில் சென்னை மற்றும் சுற்றியுள்ள கட்சி வேட்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக இந்த தேர்தலைச் சந்தித்த விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சொதப்பல் தான். ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இந்த தேர்தலைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு முறையும் 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில், வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதுதான் அனைவரதும் எதிர்பார்ப்பு.

ஆகவே, இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமை. 100 சதவீத வாக்குப்பதிவு எட்ட ஒவ்வொரு வாக்களாரின் பெயரும் விடுபடாமால் இருக்க, கட்சி சார்பில் பல முறை வலியுறுத்தியும் கூட, அதை தேர்தல் ஆணையம் செய்யவில்லை. பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை.

அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றவர்கள் எத்தனை பேர்? வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெளிவாக பதில் அளிக்க வேண்டிய கடமை இந்தியா மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.

இது போன்று எந்த காலத்திலும் ஏற்பட்டதில்லை. ஒட்டுமொத்தமாக சொதப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, பொதுவாக தேர்தல் முடிந்த அன்று இரவு வாக்குப்பதிவு சதவீதத்திற்கும், இறுதிகட்ட வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் 7, 8 சதவீதம் வித்தியாசம் இருக்கும் பொழுது, தேர்தல் ஆணையம் என்ற ஒன்று செயல்பட்டதா, இல்லையா என்ற சந்தேகம் பொதுமக்களின் மனதில் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, அது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். இனி வரும் காலங்களிலாவது இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுக்காமல், தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா என்பது சாதி, மதம், இனம் என அனைத்தும் கடந்த ஒரு மதச்சார்பின்மை நாடு. எனவே, வெறுப்பு அரசியல் கூடாது. ஆகவே, பிரதமர் சிறுபான்மையினர் குறித்து பேசியது மிக மிகக் கண்டனத்திற்குறியது. இது போன்ற பேச்சுக்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி.. தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி! - Sivakarthikeyan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.