ETV Bharat / state

"2026 தேர்தலில் அதிமுக வியூகம் இதுதான்!" - பதிலளிக்கிறார் செம்மலை

அதிமுக 53வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில், திமுக ஆட்சியில் மக்கள் படுகிற வேதனை 2026 தேர்தலில் எங்களுக்கு சாதகமாக அமையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 1 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்பு செயலாள் செம்மலை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்பு செயலாள் செம்மலை (Image credits-Etv Bharat Tamilnadu)

சென்னை: அதிமுக தொடங்கி இன்றுடன் 52 ஆண்டுகள் நிறைவு பெற்று 53வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில், கடந்த காலங்களில் அரசியல் களத்தில் அதிமுக நிகழ்த்திய சாதனைகள் மற்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் வியூகம் வரையில் பல்வேறு விஷயங்களை குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான செம்மலை ஈடிவி பாரத் தமிழ்நாடுக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

அதிமுகவின் சாதனையாக எதனை கருதுகிறீர்கள்?

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மக்கள் இயக்கமாக எம்ஜிஆர் தொடங்கினார். இந்த இயக்கம் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய ஆறு மாதத்துக்குள், திண்டுக்கல் எம்பி தொகுதியில் வெற்றி பெற வைத்தார். 9 மாத காலத்திற்குள் கோவை மேற்கு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வெற்றி கண்டது. அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகளில் 1974-ல் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் ஆட்சியை பிடித்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அரசியல் களத்தில் எந்த கட்சியும் நிகழ்த்தாத சாதனையை கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுக்குள் அதிமுக செய்தது.

மேலும், கட்சி தொடங்கிய ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து அதிமுக வரலாற்று சாதனையை படைத்தது. குறிப்பாக தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கட்சி தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்தது என்றால் அது அதிமுக தான். ஒரு முறை ஆட்சியை பிடித்த பின் தொடர்ச்சியாக இன்னொரு முறை ஆட்சியைப் பிடித்த வரலாறு திமுகவில் இல்லை. எம்ஜிஆர் தலைமையில் தொடர்ச்சியாக முன்று முறை அதிமுக ஆட்சியை பிடித்தது என்றால், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ச்சியாக இரண்டு முறை (2011,2016) தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்து வரலாற்றை படைத்தார். அதே போல் கூட்டணி இல்லாமல் ஒரு கட்சி தனித்து நின்று ஆட்சியை பிடித்தது என்றால் அது அதிமுக தான்.

அதிமுகவின் முந்தைய சாதனைகள் இப்போதும் தொடர்கிறதா?

திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின் வரை தனித்து நின்று ஆட்சியை பிடித்த வரலாறு இல்லை. திமுக எப்போதும் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து தான் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. ஆனால், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 37 தொகுதியிலே அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அதன் பின் 2016 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து நின்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து வெற்றி என்பதே திமுகவுக்கு இல்லை.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் போவார்களா?- முத்தரசன் அளித்த விளக்கம்!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக அதிமுக வருமென்றால் திமுக தான் எதிர்க்கட்சியில் அமர வேண்டும். ஆனால், அதிமுக வெற்றி பெற்ற மூன்று தேர்தலிலும், திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைக்காமல் மூன்றாம் இடத்திற்கு தள்ளிய சாதனையை அதிமுக செய்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சியிலும், காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்து திமுகவை பின்னுக்கு தள்ளியது. ஜெயலலிதா ஆட்சியில் இரண்டு முறை திமுகவை எதிர்க்கட்சியாக அமர விடவில்லை. அதேபோல் ஜெயலலிதா, நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கினார். எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் எடப்பாடி பழனிசாமி கையில் பாதுகாப்பாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறது.

இதுவரை பல வரலாற்று சாதனை படைத்த அதிமுக 53வது ஆண்டுக்கு பிறகும் தொடர்ந்து வெற்றியை பெற்று தமிழகத்தில் நல்லாட்சியை அமைக்கும். அதிமுகவிற்கு 53வது ஆண்டு வளர்பிறையாக இருக்கும். மேலும், 2026 இல் ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை உருவாகி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது உறுதி அதே போல் மக்களுடைய எண்ணமும் இதுவாக தான் இருக்கிறது.

மூன்று ஆண்டுகால திமுக ஆட்சி எப்படி இருக்கிறது?

திமுகவின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் முதல் ஆண்டில் மக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இரண்டாவது ஆண்டில் கோபமாக இருந்தார்கள். மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்ற திமுக ஆட்சியின் மீது அந்த கோபம் வெறுப்பாக மாறிவிட்டது. திமுக ஆட்சியில் பால், பேருந்து கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதனால் விலைவாசி உயர்வு நேரிட்டது. போதை பொருள் பழக்கத்தால் இளைஞர் சமுதாயம் சீர்கெட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை. இவையெல்லாம் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. மக்களின் வெறுப்பு, கோபம் என்பது 2026 இல் எங்களுக்கு சாதகமாக அமையும்.

அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளதே?

வாக்கு சரிவு ஒப்பீட்டை, சில ஊடகங்களிலும், சிலரும் சரியாக கணித்து சொல்லவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளை சட்டமன்ற தேர்தல் வாக்குகளோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. உதாரணமாக, 2011ம் தேர்தல் 2016 சட்ட மன்ற தேர்தல் வாக்குகளையும், வாக்கு சதவீதங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையவும் இல்லை, வாக்குப் பிரியவும் இல்லை, வாக்கு சரியவும் இல்லை. எங்கள் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒப்பிட்டு பார்க்கும்போது, குறைவாக இருப்பதை ஒத்துக்கொள்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலோடுதான் இன்னொரு நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

டெல்லியில் எந்த கட்சி ஆட்சிக்கு அமைய வேண்டும் என்பதற்கு ஏற்ப மக்கள் வாக்கு அளிக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவும் அமைகிறது. இரண்டு தேசிய கட்சிகளையும் அதிமுக சம நிலையில் தான் பார்க்கிறது. நாங்கள் எந்த தேசிய கட்சியோடு கூட்டணியிலும், தோழமையிலும் இல்லை.. இரண்டு கட்சிகளுமே நாணயத்தில் இரண்டு பக்கங்களை போல் பார்க்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். சட்டமன்றத் தேர்தல் என்று வரும் போது மக்கள் இரண்டு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய கடமையில் இருக்கிறார்கள். ஒன்று அதிமுக ஆட்சிக்கு வர வேண்டுமா அல்லது திமுக ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதுதான். இன்னொன்று எடப்பாடி பழனிசாமி அல்லது ஸ்டாலின் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் முடிவு எடுக்கிறார்கள்.

நிதி பகிர்வு, மாநில உரிமை, மாநிலத்தை வஞ்சிக்கிற ஆட்சியாக தான் இந்த இரண்டு தேசிய கட்சிகளும் இருக்கிறது. மத்தியில் அதிகாரம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத்திற்கான நிதியும், திட்டங்களையும் குறைக்கின்றனர்.

2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமியிடம் என்ன வியூகம் உள்ளது?

திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் இருப்பதை பார்க்கும் போது மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்காது. இந்த ஆட்சியின் மீது இருக்கிற வெறுப்பு எங்களுக்கு சாதகமாக அமையும். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கூட்டணி கட்சி பலத்தில் தான் வெற்றி பெற்று வருகிறது. இந்த முறை நிச்சயமாக திமுகவின் கூட்டணியில் இருக்க கூடிய கட்சிகள் சிதறும், சில கட்சிகள் அதிமுகவின் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது அது வெளிப்படையாக தெரிகிறது.

மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக-வின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் திமுக மீது மாறுபட்ட விமர்சனங்களை வைத்து வருகின்றனர். விசிகவினர் திமுகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். 2026 தேர்தலை சந்திக்க அதிமுகவுக்கு கூட்டணியை பலப்படுத்தும் தேவை இருக்கிறது. அதற்கான வியூகங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார். எங்களுக்கு அதற்கான வாய்ப்பு ஏற்படும் வகையில் சூழலும் சாதகமாக இருக்கிறது.

மன்னர் காலத்தில் போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்கு வியூகங்களை வகுப்பார்கள். அப்படி வியூகங்களை வகுத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். இப்படிப்பட்ட பல வியூகங்கள், சந்தர்ப்பம் எங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைவது கணித்து பார்க்கும்போது, 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்து, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலைமைச்சராக்குவோம். கடந்த முறை 4 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் நல்லாட்சி கொடுத்தது போல மீண்டும் நல்லாட்சி கொடுப்போம். சூழ்நிலையும் எங்களுக்கு சாதகமாகி வருகிறது. மக்கள் இந்த ஆட்சியில் படுகிற வேதனை எங்களுக்கு சாதனையாக அமையும்.

53 வது ஆண்டு அதிமுகவிற்கு எப்படி இருக்கும்?

53 வது ஆண்டு தொடக்கம் அதிமுகவுக்கு பிரகாசமாக இருக்கும்.. இது திமுகவின் தேய்பிறை காலம்.. இன்னும் 18 அமாவாசைகள் தான் திமுகவிற்கு இருக்கிறது. அமாவாசை முடிந்த அடுத்த நாளை கிராமத்தில் வெறும் வானம் என்று சொல்வார்கள். அந்த வெறும் வானம் என்ற நிலை தான் 2026 தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு வரப்போகிறது. அமாவாசை முடிந்த மூன்றாம் நாள் வளர்பிறை காலம்.. அது போல அதிமுகவை பொறுத்தவரையில் 2026 தேர்தல் அதற்குப் பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வளர்பிறை காலமாக இருக்கும். இதற்கு அச்சாரமாக 53வது துவக்க ஆண்டும் எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.