சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான கால அவசகாசம் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் வெளியான அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் 6.18 கோடி பேர் இறுதி வாக்காளர்கள் உள்ளனர். இது மேலும் இப்பட்டியலில் இறுதியாக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் இணைக்கப்பட உள்ளதால் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
9.12.2023-க்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் 5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்னர் வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில், வேட்பு மனு தாக்கல் வரும் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதற்கு பத்து நாட்கள் முன்னதாக வரை, பெயர் சேர்க்கலாம் என்பதால் நேற்று (மார்ச் 17 வரை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, இந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. அந்தவகையில், நேற்று வரை பெறப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் துணை பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும். அதன்பிறகும் பெயர் சேர்க்க வரும் விண்ணப்பங்கள் தேர்தலுக்குப் பின்னர் பரிசீலிக்கப்படும்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே, ஏப்ரல் 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி கடைசி நாளாகும். பின்னர், மார்ச் 28ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். அதன்பின்னர், மார்ச் 30ஆம் தேதியுடன் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம்"- பாரத் நியாய யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின் பேச்சு!