ETV Bharat / state

மக்களுக்கு என்ன செய்தீர்கள்? - விவாதிக்க திமுகவினருக்கு அழைப்பு விடுத்த முன்னாள் அமைச்சர்! - Lok Sabha Election 2024

Ex Minister Benjamin: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பிரேம் குமாரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், திமுக அரசு மூன்று ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தது என்று சொல்ல முடியுமா?, ஒரே மேடையில் நீங்கள் என்ன செய்தீர்கள்?, நாங்கள் என்ன செய்தோம் என்று விவாதிக்க தயாரா?” என திமுகவினருக்கு சவால் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 2:14 PM IST

அதிமுக

சென்னை: 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி வெள்ளி கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பிரேம் குமாரை ஆதரித்து, நேற்றிரவு சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தாய்மார்களின் எதிர்காலம் கேள்விக்குறி: அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் ஏற்பாட்டில் நடந்த இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், டி.கே.எம். சின்னையா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், “திமுக ஆட்சியில் தாய்மார்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக குறியாக இருக்கிறது. அதிமுக ஆட்சியை குறை சொன்ன திமுக, தற்போது 3 வருடமாக ஆளும் கட்சியாக தானே இருக்கிறது.

விவாதிக்க தயாரா?: இப்போது அவர்கள் எல்லா திட்டங்களையும் மக்களுக்கு செய்யலாமே. அதிமுகவாகிய நாங்களா செய்ய வேண்டாம் என்று கையை பிடித்து தடுத்தோம். இல்லையென்றால் திமுக அரசு மூன்று ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தது என்று சொல்ல முடியுமா?, திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்று கூற முடியுமா?” என கேள்வி எழுப்பினார். மேலும், ஒரே மேடையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? நாங்கள் என்ன செய்தோம் என்று விவாதிக்க தயாரா? எனவும் சவால் விடுத்தார்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்: தொடர்ந்து பேசிய அவர், “உங்கள் ஆட்சியை தேர்வு செய்த மக்களுக்கு சேவை செய்யுங்கள். அது உங்கள் கடமை. அதைவிட்டுவிட்டு மற்றவர்கள் என்ன செய்தார்கள் என கேட்காதீர்கள். தற்போது முகப்பேர் தொகுதியில் மழைக்காலத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்கவில்லை என்றால் அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்துக்கொடுத்த திட்டம் தான். இது சட்டமன்ற தேர்தல் அல்ல. நாடாளுமன்ற தேர்தல். கண்டிப்பாக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.

கருத்துக் கணிப்பு தவுடுபொடியாகிவிட்டது: இந்தத் தேர்தலில் அதிமுகவினர் எங்கு பொதுக்கூட்டம் நடத்தினாலும் பெரும் கூட்டமாக மக்கள் வருகின்றனர். இது திமுகவினரின் தூக்கத்தை தொலைத்துவிட்டது. கருத்துக் கணிப்பு எல்லாம் தவுடுபொடியாகிவிட்டது. திமுகவினர் தற்போது மின்கட்டணத்தை அதிகமாக உயர்த்தியுள்ளனர். மின்சாரமும் அவ்வப்போது துண்டிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியதுடன், 100 யுனிட் மின்சாரம் இலவசம் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா” என்றார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி யாருக்கு.. ரேஸில் முந்துவது யார்? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.