ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தொடர்பான வழக்கு; தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம்! - Madras High Court - MADRAS HIGH COURT

Former Minister Jayakumar Case: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தொடர்பான புகாரை மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மாநில மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 4:12 PM IST

சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது, சென்னை மாநகராட்சியின் 49வது வார்டில் திமுகவைச் சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போடுவதாக புகார் எழுந்தது. அப்போதைய நிலையில், திமுக பிரமுகர் நரேஷ் குமார் என்பவரை பிடித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடன் இருந்த அதிமுகவினர், திமுக பிரமுகர் நரேஷ் குமார் மீது கள்ள ஓட்டுப் போடுவதாக குற்றம்சாட்டினார்.

இதுமட்டுமல்லாது, திமுக பிரமுகர் நரேஷ் குமாரின் சட்டையைக் கழற்றி, அவரை அரை நிர்வாணமாக அழைத்துச் சென்று போலீசாரிடமும் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, திமுக பிரமுகர் நரேஷ் குமாரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, இந்த கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனும் மற்றும் சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரை கடந்த ஜூலை மாதம் மாநில மனித உரிமைகள் ஆணையம் முடித்துவைத்தது. ஆனால், தான் அளித்த புகாரில் தனது விளக்கத்தைக் கேட்காமல் வழக்கை முடித்து வைத்ததாகக் கூறி, ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஆணைய உறுப்பினராக (உறுப்பினர் கண்ணதாசன்) உள்ள திமுக ஆதரவு நபரால் தனது புகார் நேர்மையாக நடுநிலையுடன் விசாரிக்கப்படவில்லை எனவும், புகாரை முடித்து வைத்த ஆணைய உத்தரவை ரத்து செய்து, புகார் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மாநில மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென கால அவகாசம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த காரணமும் தெரிவிக்காமல் மீண்டும் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை அடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வீரப்பன் மகள் வாங்கிய 9.2% ஓட்டுகள்.. கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.