சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் விஜய், பிப்ரவரி 2ஆம் தேதி, தான் துவங்கிய தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின், முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே இலக்கு எனவும் அறிவித்திருந்தார்.
பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய், அரசியல் கட்சி துவங்கியதை தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்களும் நடிகர் விஜய் கட்சி துவங்கியதற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறாரா? ரசிகர்களின் வேண்டுகோள் இதுதான்!