ETV Bharat / state

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கொடி, பாடல் அறிமுகம் - TVK Party Flag

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 6:45 AM IST

Updated : Aug 22, 2024, 8:47 AM IST

TVK Party Flag: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிடுகிறார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் (Credit - ETV Bharat)

சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியைப் பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறம், நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்த காணொளி வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 9.15 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விஜய் பாடலையும் வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கட்சிக் கொடி அறிமுகம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியானவராக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் ஆக.22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் நம்வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நம் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சிக் கொடி பாடலை வெளியிட்டு கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? - ஜோதிடர் சுப்பிரமணியன் கூறுவது என்ன?

Last Updated : Aug 22, 2024, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.