ஈரோடு: நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் இம்மாதம் 19ஆம் நடைபெற உள்ளது. ஏழுகட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர் தீவிர பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், நீலகிரி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பனையம்பள்ளி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் அவரை நான் அதிமுகவில் இருந்தது நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான். அவரது மறைவிற்குப் பிறகு நல்ல கட்சியில் சேர வேண்டும் என்பதற்காக பாஜகவில் சேர்ந்து விட்டேன். காரணம் முன்னாள் முதலமைச்சர் சேவல் சின்னத்தில் போட்டியிடும் போது அவருக்காக நான் பிரசாரம் செய்தேன்.
அந்த காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் எல்லாம் கட்சியில் இல்லை. ஆனால் கட்சியின் மூத்த தொண்டன் என்ற முறையில் என்னை மதிக்கவில்லை அதனால் தான் இங்கு வந்து சேர்ந்தேன். கரோனா காலத்தில் நம்மை காப்பாற்ற இவ்வளவு விரைவில் தடுப்பூசி பிரதமர் மோடி தலைமையிலான அரசைத் தவிர வேறு எந்த அரசும் கண்டுபிடித்திருக்க முடியாது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட நம்முடைய தடுப்பு மருந்து வேண்டும் என கேட்டு பெற்றனர். இப்படிப்பட்ட பிரதமர் மோடிக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா. அதுமட்டுமல்லாமல் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பலருக்கு வீடு கட்டி தரப்பட்டுள்ளது. மேலும், கழிவறை கட்டும் திட்டம், காப்பீடு திட்டம், மலிவு விளை மருந்தகம் என மொத்தம் தமிழகத்திற்கு ஐந்தரை லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த எடப்பாடி மற்றும் 3 ஆடுகளில் திமுக இருந்தார்கள். இருவரும் இது குறித்து பதிலளிக்க வேண்டும். எப்போதும், மத்திய அரசு எதுவும் கொடுக்கவில்லை எனக் கூறுகிறார். நாட்டின் மேம்பாடுகளுக்காக மெட்ரோ ரயில்கள், மேம்பாலம், சுரங்க பாதைகள் என எண்ணற்ற மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டது.
பிரதமர் மோடியை அனுப்பினால் கச்சத்தீவை மீட்டுத் தந்து விடவார். காரணம், ரஷ்யா - உக்ரைன் போரின் போது தனி விமானம் மூலம் நம்மக்களை மீட்டார். நமக்கு கிடைத்துள்ள பிரதமர் மோடி கிடைத்தது பெரிய பொக்கிஷம். நம்மை பிரதமர் மோடி ஆட்சி செய்வது நமக்கு கிடைத்த பொக்கிஷம். மேலும், பழனியில் பழனி முருகன், இங்கே போட்டியிடும் வேட்பாளர் செந்தி முருகன், அவரை ஆதரித்துப் பேச வந்திருக்கிறது செந்தில் முருகன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் நடிப்பை பார்த்தால் நடிகர் திலகமே மயங்கியிருப்பார்" - கோவையில் முதலமைச்சரை விளாசிய ஈபிஎஸ்!