ETV Bharat / state

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து! - actor premji marriage - ACTOR PREMJI MARRIAGE

நடிகர் பிரேம்ஜியின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் பிரேம்ஜி திருமணம்
நடிகர் பிரேம்ஜி திருமணம் (credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 11:49 AM IST

Updated : Jun 9, 2024, 2:15 PM IST

சென்னை: இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவராக வலம் வருகிறார். சென்னை 28 மற்றும் அஜித் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களில் பிரேம்ஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

பிரேம்ஜி திருமணம் நிகழ்வு (credits-ETV Bharat Tamil Nadu)

மேலும் சில படங்களுக்கு இசை அமைத்து பாடல்களும் பாடியுள்ளார்.சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நகைச்சுவை கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருவார். பன்முகத் திறமை கொண்ட இவர் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

அவரிடம் ரசிகர்கள் எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும் என ரசிகர்கள் கேட்கும் போது, நடக்கும் போது நடக்கும் என நகைச்சுவையாக பதில் அளித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இந்து என்பவருக்கும் இன்று (ஜூன்.9) திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

முன்னதாக இவர்களது திருமண பத்திரிக்கை வெளியாகி வைரல் ஆனதையடுத்து தங்களது பிரைவெசியை மதித்து மணமக்களை மனதார வாழ்த்துங்கள், திருமணம் முடிந்ததும் புகைப்படங்கள் பகிர்கிறேன் என்று வெங்கட் பிரபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் மணமகளின் உறவினர்கள் மற்றும் பிரேம்ஜியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சென்னை 28 படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக நேற்று திருத்தணியில் உள்ள தனியார் ஓட்டலில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் கச்சேரியில் பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் காமெடியன் ரோல்? சூரி அளித்த ‘நச்’ பதில்!

Last Updated : Jun 9, 2024, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.