ETV Bharat / state

“கள்ளச்சாராய சாவை வைத்து கபட நாடகமாடும் எடப்பாடி” - கருணாஸ் விமர்சனம்! - actor karunas - ACTOR KARUNAS

Karunas: தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, தமிழ்நாட்டு உரிமையை மீட்க ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்திடாத எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு கபட நாடகம் போடுகிறார் என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, நடிகர் கருணாஸ் புகைப்படம்
எடப்பாடி பழனிசாமி, நடிகர் கருணாஸ் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 4:05 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரையில் 65 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தியவர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க தவறியதாக, தமிழக அரசைக் கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று (ஜூன் 27) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக அதிமுகவின் போராட்டங்களை விமர்சித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து கடந்த சில நாள்களாக எடப்பாடி பழனிசாமி நடத்தும் கள்ள நாடக காட்சிகள் சகிக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, எடப்பாடி தமிழ்நாட்டு உரிமை மீட்க ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்ததில்லை.

நாடாகம் ஆடும் எடப்பாடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடிய போது தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று கூறிய எடப்பாடி, இன்று அத்தனை தகிடுத்தத்தங்களையும் மறந்துவிட்டு உண்ணாவிரத நாடகமாடுகிறார். கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைக்காமல், திசை திருப்பும் அரசியலை கையில் எடுத்து எடப்பாடி நாடகமாடுகிறார்.

அரசியல் நாடகம்: சட்டமன்றத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சனைக்கு பேசாது மௌனமாய் இருந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி இன்று கள்ளக்குறிச்சிக்கு காவடி ஆடுகிறார். அவர் ஆட்சியில் இருந்தபோது, எத்தனை முறை மக்கள் பிரச்சனையை பேச வந்த திமுகவை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றினார். எடப்பாடி செய்வது அரசியல் நாடகம்.

ஆதாய அரசியல்: கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் ஆதாய அரசியல் செய்கின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு உடனுக்குடன் செய்தது. பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சி தலைவர் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். கள்ளச்சாராய தொடர்புடையோர் கைது செய்யப்பட்டனர்.

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஒழிந்ததா?: கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை வைத்து திட்டமிட்டு அரசியல் செய்வது ஏன்? எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நிகழவில்லையா?அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 53 பேர் உயிரிழந்தனர். 200 பேரின் பார்வை பறிபோனது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஒழிந்ததா?

கபட நாடகம்: பா.ஜ.க. ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்தேறின. ஒவ்வொரு முறையும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநில முதலமைச்சரை பதவி விலகக்கோரி யாரும் கூறவில்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உண்ணாவிரதம் இருக்கிறார். அதிமுகவின் தொடர் தோல்வியை மூடி மறைக்க எடப்பாடி காட்டும் கபடநாடக வித்தை.

விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு : எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக வந்த நாளிலிருந்து தேர்தல்கள் அனைத்திலும் தோல்வி. அதனால், தேர்தல் நேர்மையாக நடக்காது என்று சொல்லி விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார். இவரது தேர்தல் புறக்கணிப்புக்குப் பின்னால் இரண்டு சூழ்ச்சிகள் இருக்கின்றன. ஒன்று அதிமுக போட்டியிட்டால் நிச்சயம் தோற்றுப் போகும். இன்னொன்று, தனது எஜமானன் ரகசிய உறவாளன் பாஜகவின் வேட்பாளருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து தனது அடிமை விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளவது.

இதையும் படிங்க: கல்வி விருது விழாவில் விஜய் பேசிய அரசியல் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.