ஹைத்ராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் (87), உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது X வலைத்தளப் பதிவில், "இந்திய ஊடகம் மற்றும் சினிமாத் துறையின் தலைவரும், ஈ-நாடு குழுமத்தின் தலைவருமான ராமோஜி ராவ் அவர்களின் மறைவுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன். ராமோஜி ஃபிலிம் சிட்டி ராமோஜி ராவ் அவர்களின் கையால் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருளின் நினைவாக இருக்கும்.
ராமோஜி ஃபிலிம் சிட்டி ஒரு படப்பிடிப்பு இடம் மட்டுமல்லாமல், பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. தொலைநோக்கு மற்றும் புதுமையான சிந்தனையாளரின் மறைவு இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நவீன ஊடக உலகின் பிதாமகன்.. ராமோஜி ராவ் கடந்து வந்த பாதை! - Ramoji Rao Passes away