ETV Bharat / state

'அண்ணாமலை ஓடிப்போனவர்'.. கள்ள உறவில் திமுக - பாஜக... விளாசும் காயத்ரி ரகுராம்!

சென்னையில் கன மழை பெய்யாத போதும் அரசு முறையாக நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, தண்ணீர் ஆங்காங்கே தேங்கியது என அதிமுகவின் மகளிர் அணி இணைச் செயலாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

போட்டியாளர்களுடன் காயத்ரி ரகுராம்
போட்டியாளர்களுடன் காயத்ரி ரகுராம் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திமுக - பாஜக இடையே கள்ள உறவு உள்ளது என்றும் இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் சசிகலா மூலமாக அதிமுகவிற்குள் கட்சி பூசல் செய்துவிடலாம் என திமுக மற்றும் பாஜக திட்டமிடுகிறது என காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவின் 53 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில் தலைமையில் சென்னை தி.நகரில் கேரம் போர்டு போட்டி நடத்தப்பட்டது.

இதில் 36 அணிகள் கலந்து கொண்ட நிலையில், இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுகவின் மகளிர் அணி இணைச் செயலாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவின் திட்டங்களை பின்பற்றி திமுக தற்போது செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்களை திமுகவால் எந்த நிலையிலும் போட முடியாது என்றார்.

தொடர்ந்து பேசியவர், கனமழை என ஊடகங்கள் மற்றும் திமுகவினர் மட்டும் தான் சொல்கிறார்கள். ஆனால், கள எதார்த்தம் அப்படி கிடையாது.. இரண்டு மணி நேரம் தான் கனமழை பெய்தது. அதைக் கூட இந்த மழை நீர் வடிகால்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. டீ வாங்கி கொடுத்து போட்டோ எடுப்பது மட்டும் வேலை இல்லை.

திமுக மற்றும் பாஜக கள்ள உறவில் இருக்கிறார்கள்.. அதிமுகவில் பூசல் வரவேண்டும் என திமுக பாஜக இணைந்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா மூலமாக சூழ்ச்சி செய்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

மேலும், அண்ணாமலை ஓடிப்போனவர், அவரைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை.. அவரை ஒரு தலைவராகவே நான் என்றைக்கும் கருதியதில்லை.. பாஜகவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் தெளிவாக எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்" என காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.