ETV Bharat / state

கோர்ட்டை நாடிய பிரபல தயாரிப்பாளரின் மகன்.. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பறந்த உத்தரவு! - actor al udhaya - ACTOR AL UDHAYA

South Indian Actors Association Annual General Meeting: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.உதயா தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 7:33 PM IST

சென்னை: சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் நடிகர் ஏ.எல்.உதயா தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக உள்ளேன். நடிகர் சங்கத்திற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியான நட்சத்திர கலை விழா, ஸ்டார் கிரிக்கெட் போட்டி போன்றவற்றில் உதவி செய்துள்ளேன்.

கடந்த 2015 தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்டு செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். இந்த நிலையில், சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக, 30 கோடி ரூபாய் கடன் பெறுவது தொடர்பாக எனது கருத்தை தெரிவித்திருந்தேன். இதையடுத்து, என் மீது சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என்னை 2022 செப்டம்பர் 27 முதல் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இந்த சஸ்பெண்ட் காலம் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், நாளை தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூடுகிறது. ஆனால், ஆயுட்கால உறுப்பினராக எனக்கு பொதுக்குழுவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. இதையடுத்து, எனக்கு பொதுக்குழுவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்குமாறு சங்கத்திற்கு கடிதம் அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. எனவே, நான் பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு 8வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் பி.நிதிஷ் குமார், ஆர்.வி.பாபு ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு; ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.