ETV Bharat / state

780 நட்சத்திர ஆமைகள்.. 1,500 இ-சிகரெட்.. சென்னை விமான நிலையத்தில் தொடரும் கடத்தல்! - Star Tortoise seized in Airport - STAR TORTOISE SEIZED IN AIRPORT

Star Tortoise Smuggling: சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புடைய 780 நட்சத்திர ஆமைகள் மற்றும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்புடைய இ சிகரெட்கள் என மொத்தம் ரூ.52 லட்சம் மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 3:06 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கிடையே, விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கம்போல் பரிசோதித்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சுற்றுலாப் பயணிகளாகச் செல்ல ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் (36), யூசும் (35), அஸ்ரப் (40) ஆகிய 3 பேரும் வந்திருந்தனர். அவர்களின் பொருட்களை சோதனை செய்த அதிகாரிகள், அட்டைப் பெட்டிகளில் என்ன இருக்கிறது என கேட்டதற்கு, அரிசி சமையல் பொருட்கள் உள்ளது என பதிலளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த அட்டைப் பெட்டியை சோதனை செய்த போது, பெட்டிக்குள் ஏதோ லேசாக அசைந்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அட்டைப் பெட்டியை திறந்து பார்த்த போது, உள்ளே உயிருடன் 780 நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அந்த மூவரின் பயணத்தையும் ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களையும், நட்சத்திர ஆமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுங்க அதிகாரிகள், நட்சத்திர ஆமைகளைப் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், சதுப்பு நிலப்பகுதியிலிருந்து நட்சத்திர ஆமைகளைப் பிடித்து மலேசியாவுக்கு கடத்திச் செல்வதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் எனவும் தெரிய வந்துள்ளது. தற்போது பறிமுதல் செய்த நட்சத்திர ஆமைகளை கிண்டி சிறுவர் பூங்கா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது, சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி, தனது உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்து, அப்பயணியை கைது செய்துள்ளனர். அந்த இ-சிகரெட்களின் சர்வதேச மதிப்பு ரூ.37 லட்சம் எனத் தெரிய வந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபத் திருவிழா: தி.மலை கோயிலில் தேர் செப்பனிடும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.