ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை விசைப்படகோடு சிறைபிடித்த இலங்கை கடற்படை.. மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்! - Rameswaram fishermen arrest - RAMESWARAM FISHERMEN ARREST

Rameswaram fishermen arrested by Sri Lankan Navy: தலைமன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.

மீனவ கப்பல் (கோப்புப்படம்)
மீனவ கப்பல் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 10:58 AM IST

Updated : Aug 27, 2024, 3:27 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்த நிலையில், தலைமன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, ஒரு விசைப்படகையையும், அதில் இருந்த 8 பேரையும் சிறை பிடித்து விசாரணைக்காக கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையினால் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "IND-TN-10-MM-34 என்ற பதிவெண் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் 26.08.2024 அன்று கைது செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளதோடு, தற்போது 116 இந்திய மீனவர்களும், 184 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர்கள் இதுபோன்று தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள், மீனவர்களின் குடும்பத்தினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பரப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களை மட்டுமல்லாமல், அவர்களை நம்பி வாழும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வையும் பாதிப்பதாக தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், இந்தியப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: "ஒரு இந்துவுக்கே இந்து கோயிலில் அனுமதி இல்லை" - நடிகை நமீதா வருத்தம்!

Last Updated : Aug 27, 2024, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.