ETV Bharat / state

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அச்சிடப்படவில்லை - ஆவின் நிர்வாகம் விளக்கம்! - Aavin management about greeting - AAVIN MANAGEMENT ABOUT GREETING

Tamil New Year greetings by Aavin: தமிழ்ப் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டதில்லை, எனவே இந்த ஆண்டும் அச்சிடப்படவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ஆவின் நிர்வாகம் விளக்கம்
ஆவின் பால் பாக்கெட்டுகளில் இந்தாண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 7:33 PM IST

சென்னை: தமிழ்ப் புத்தாண்டிற்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி அச்சிட்டு வெளியிடுவது குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து முக்கிய பண்டிகைகளின் போது, மக்களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளில் ஆவின் நிர்வாகம் வாழ்த்துச் செய்தியை அச்சிட்டு வழங்கி வருகிறது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டிற்கு எந்த ஒரு வாழ்த்து செய்தியும் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்படாமல் இருந்தது மக்கள் மத்தியில் பேசுபொருளானது.

இது குறித்து நிர்வாக மேலாண்மை இயக்குநர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்திகளை அச்சிட்டு விநியோகித்து வருகிறது.

இந்த முறையானது பல்வேறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவையாகும். தமிழ்ப் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டதில்லை. எனவே இந்த வருடமும் அச்சிடப்படவில்லை என்பதை ஆவின் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது", என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறி முதல்வர் அமைச்சர் படம்" - பறக்கும் படையினர் அகற்றம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.