ETV Bharat / state

"அடுத்து என்ன செய்யப்போகிறார் என ஆதவ் அர்ஜுனாவிடம் கேளுங்கள்!"- திருமாவளவன் காட்டம் - THIRUMAVALAVAN ON AADHAV ARJUNA

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்து என்ன செய்யப்போகிறார் என ஆதவ் அர்ஜுனாவிடம் கேளுங்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விசிக திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா
விசிக திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 1:19 PM IST

Updated : Dec 10, 2024, 2:42 PM IST

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து கூறிவருவதாக அவர் மீது விசிகவினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசிய போது, ஆட்சியலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என கேட்டால் என்ன தவறு? தமிழகத்தில் மன்னராட்சி நடந்து வருகிறது. பிறப்பால் அதிகாரத்தை பெறுகின்றனர் என ஆளுங்கட்சி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார்.

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து, விசிகவின் உயர்மட்டக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவை விசிகவில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்வதென முடிவெடுக்கப்பட்டதாக நேற்று (டிசம்பர் 9) விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து இன்று (டிசம்பர் 10) சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது திருமாவளவனிடம் செய்தியாளர்கள், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “கட்சியில் நன்கு ஆலோசித்த பிறகு தான் ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்தோம்.

இதையும் படிங்க: செல்வபெருந்தகை எல்.எல்.ஏ ஆவது என் கையில்? - அமைச்சர் துரைமுருகன் சொன்ன பதில் என்ன?

அடுத்த கட்டமாக விசிக என்ன செய்யப்போகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன் “அந்த கேள்வியை ஆதவ் அர்ஜுனாவிடம் கேளுங்கள், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் கொள்கை. ஆனால், அது குறித்து இப்போது பேச இது தேர்தல் நேரமில்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று ஆளுங்கட்சியை அவமதிப்பது போல், பொதுவெளியில் பேச வேண்டிய அவசியமில்லை,” என்றார்.

இதையடுத்து, விஜய்யின் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஆரம்பத்தில் கூறியது போல்தான் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை” என்றார். இதையடுத்து விஜய் இண்டி கூட்டணியிலோ? அல்லது விசிகவுடனோ வருங்காலத்தில் கூட்டணியில் இணைவாரா? என கேட்டனர். அதற்கு எனக்கு தெரியாது என கூறியபடி திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Last Updated : Dec 10, 2024, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.