ETV Bharat / state

பள்ளி திறப்பு நாளன்றே பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் முகாம் துவக்கம்! - Aadhaar registration camp at school

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 10:53 PM IST

Aadhaar registration camp for 1st to 12th students: ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் முகாம் நடத்தப்பட உள்ளது.

மாணவர்கள் புகைப்படம்
மாணவர்கள் புகைப்படம் (tn school education department X page)

சென்னை: ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் பதிவு செய்தல் மற்றும் பதிவை மேம்படுத்தல் பணிகள் பள்ளி திறக்கும் ஜூன் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் இன்று (மே 29) அறிவித்துள்ளார்.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை, காலணி, புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை, உறைக் காலணி, காலுறைகள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.

மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிடுவது அவசியமாகும்.

குறிப்பாக, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவி மற்றும் ஊக்கத்தொகை அனைத்தும் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினைக் (ELCOT) கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மேற்கொள்ள அனுமதியளித்தும், அப்பணிகளுக்கென தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாணையின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் (ELCOT) ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம், ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி துவக்கப்படும் ஜூன் 6 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்பட உள்ளது. இந்நிகழ்வினை, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் துவங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி ரத்து.. எப்போது அமல்? - RC Cancel Rules

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.