ETV Bharat / state

சென்னையில் காவலரைத் தாக்கிய இளைஞருக்கு உருட்டுக் கட்டையால் அடி.. அதிர்ச்சி வீடியோ வைரல்! - POLICE ATTACK YOUTH WITH STICK - POLICE ATTACK YOUTH WITH STICK

Youth attack Policeman at stone: சென்னையில் இளைஞர் ஒருவரைத் தலைமைக் காவலர் உருட்டுக் கட்டையால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

காவலர் இளைஞரை தாக்கும் புகைப்படம்
காவலர் இளைஞரை தாக்கும் புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 5:47 PM IST

காவலர் இளைஞரை தாக்கும் காட்சி (Credit: ETV Bharat Tamilnadu)

சென்னை: சென்னையில் இளைஞரைச் சீருடை அணிந்த காவலர் ஒருவர் உருட்டுக் கட்டையால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவலர் இளைஞரின் தலை மற்றும் காலில் உருட்டுக் கட்டையால் தாக்குவது, பெண் ஒருவர் அதனைத் தடுக்க முயற்சிப்பதும் பதிலுக்குக் காவலரைச் சாலையில் உள்ள கற்களை எடுத்து இளைஞர் தாக்க முயல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.

சென்னை ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் லோகேஷ் என்ற இளைஞர் போதையில் பொதுமக்கள் மீது கற்களை எடுத்து வீசி அட்டூழியம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அறிந்த தலைமைக் காவலர் சரவணன் இளைஞர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.

ஆனால், இளைஞர் லோகேஷ், காவலரையும் கற்களால் தாக்க முயன்றதாகவும், அதனால் தான் காவலர் உருட்டுக் கட்டையால் இளைஞரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து விளக்கம் அளித்த காவல் ஆணையரகம், விசாரிக்கச் சென்ற காவலரையும் கற்களைக் கொண்டு அடிக்க முயற்சி செய்ததால் குறைந்தபட்ச பலம் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: போலந்து நாட்டுப் பெண்ணுக்கும் தமிழ்நாட்டு இளைஞருக்கும் டும் டும்! - Tamil Boy Poland Girl Married

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.