ETV Bharat / state

சென்னையில் பயங்கரம்.. அண்ணனுக்குப் போட்ட ஸ்கெட்ச்சில் தம்பி கொடூர கொலை..! - youth murder in Chennai

A Youth Murdered in Chennai: சென்னையில், முன்விரோதம் காரணமாக அண்ணனை தேடி வந்த கும்பல் தம்பியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞர்
கொலை செய்யப்பட்ட இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 10:32 AM IST

சென்னை: கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மா(24). கூலித் தொழிலாளியான இவர், நேற்று வழக்கம்போல் பணி முடித்துவிட்டு, இரவு சுமார் 9 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில், நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், தர்மாவிடம் 'உனது அண்ணன் சூர்யா எங்கே' எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு தர்மா பதிலளிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தி, பீர் பாட்டில் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், தடுக்கச் சென்ற தர்மாவின் நண்பன் கிஷோரையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் தர்மாவுக்கு வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரை மீட்ட அவரது நண்பர்கள் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தர்மா, நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஆர்.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த தர்மாவின் அண்ணன் சூர்யாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பலுடன் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் பாதிக்கப்பட்ட நபர், முன்விரோதம் காரணமாக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை திட்டமிட்டிருக்கலாம் எனவும், அண்ணனுக்குப் போட்ட ஸ்கெட்சில் தம்பி பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத அந்த 4 நபர்களையும், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது, இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களை ஒருமையில் திட்டியதாக புகார்.. தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.