ETV Bharat / state

திருப்பத்தூரில் லோன் வாங்கித் தருவதாகக் கூறிய நண்பன்; நம்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பின்னணி என்ன? - TIRUPATTUR MONEY FRAUD

திருப்பத்தூரில் லோன் வாங்கி தருவதாகக் கூறி, சிலர் மூட்டை தூக்கும் தொழிலாளியிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் எஸ் பி அலுவலகம்
திருப்பத்தூர் எஸ் பி அலுவலகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2024, 3:03 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி மூட்டை தூக்கும் தொழிலாளி பெயரில் வங்கி கணக்கைத் தொடங்கி, அதன் மூலம் மோசடி அரங்கேறியுள்ளதாகவும், தற்போது, அதனால் கூலித் தொழிலாளிக்கு ரூ.2 கோடிக்கு மேல் GST கட்ட வேண்டும் என வந்த நோட்டிஸ் வந்துள்ளதாகவும் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மோசடி சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கூலித் தொழிலாளி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனவர் பாஷா(24). இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், ஆட்டோ ஓட்டிக் கொண்டும், மூட்டை தூக்கும் தொழில் செய்தும் வருகிறார். இந்த நிலையில் முனவர் பாஷா உடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த நண்பனான, வாணியம்பாடி கோட்டை ஹாஜிதெரு பகுதியைச் சேர்ந்த நதீம்அகமது என்பவரின் மகன் காசிப்அகமது, முனவர் பாஷாவிடம் மூட்டை தூக்கும் தொழில் செய்வதை விட்டுவிட்டு எனவும், அதற்கு பதில் உனக்கு வங்கியில் லோன் (Loan) வாங்கி தருகிறேன்.

ஆசை வார்த்தை கூறி மோசடி:

மோசடியில் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி
மோசடியில் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி (ETV Bharat Tamil Nadu)

அதன் மூலம் கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி பிழைப்பு நடத்திக் கொள் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதை நம்பிய பாஷா ஒப்புக்கொண்டு, அவருடைய பேன்கார்ட் (PAN Card), ஆதார்கார்ட் (AAdhar Card) உள்ளிட்ட ஆவணங்களைக் கொடுத்துள்ளார். அப்போது, வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் எனக் கூறிய காசிப்அகமது நிரப்பப்படாத படிவத்தில் முனவர் பாஷாவிடம் பல இடங்களில் கையெழுத்து வாங்கியுள்ளார்.

மேலும், பிரபல தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவதாகவும், உனக்கு வங்கியிலிருந்து ஒரு ஓடிபி (OTP) எண் வரும், அப்படி வந்தால் அதனை என்னிடம் கூறினால் உனக்கு லோன் கிடைத்து விடும் எனக் கூறியுள்ளார். அதனை நம்பிய முனவர் பாஷா ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார். அதன்பிறகு வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் செக்புக் வந்துள்ளது. இந்த நிலையில், 10 செக்கில் முனவர் பாஷாவிடம் காசிப் அகமது கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

கூலித் தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி:

அதனையடுத்து, டிசம்பர் 6ஆம் தேதி முனவர் பாஷாவிற்கு தபால் நிலையத்தில் இருந்து ரிஜிஸ்டர்போஸ்ட் (Registered post) ஒன்று வந்துள்ளது. அதில், சென்னை பெரம்பூரில் ஏசிஇ என்டர்பிரைசஸ் என்ற கம்பெனி முனவர் பாஷா நடத்தி வருவதாகவும், அதற்கு ரூ.2 கோடியே 22 லட்சத்து 95 ஆயிரத்து 859 ஜிஎஸ்டி (GST) வரி நிலுவையில் உள்ளதாகவும், அதனை கட்ட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: டிஜிட்டல் கைது: ஊட்டியில் ஐ.டி.ஊழியரிடம் மோசடி; 8 நாட்கள் வீட்டில் அடைக்கப்பட்ட இளம்பெண்!

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முனவர் பாஷா உடனடியாக இதுகுறித்து காசிப் அகமதுவிடம் கேட்டுள்ளார். அதற்கு, காசிப்அகமது அதற்கெல்லாம் நீ பயப்பட வேண்டாம், இதை சலமாபாத் பகுதியைச் சேர்ந்த சையத்புரான் பார்த்து கொள்வார் எனக் கூறியுள்ளார்.

எஸ்.பி அலுவலகத்தில் புகார்:

பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அதன்பின் டிசம்பர் 7ஆம் தேதி முனவர் பாஷாவை வாணியம்பாடியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வருமாறு காசிப் அகமத் கூறியதாகவும், அப்போது அங்கு இருந்த காசிப் அஹமது மற்றும் சல்மான் ஆகியோர் முனவர் பாஷாவிடம் இருந்த ஒரிஜினல் நோட்டீஸை வாங்கி கொண்டு, நீ எதுவும் பயப்பட வேண்டாம். எல்லாம் சையத்புரான் பார்த்துக் கொள்வார், பணத்தை அவர் கட்டிவிடுவார். அதனையும் மீறி உன்னை விசாரணைக்கு அழைத்தால், விசாரணைக்கு நீ செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியிலும், பயத்திலும் இருந்த முனவர் பாஷா இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். அதில், இதற்கெல்லாம் காரணம் காசிப்அகமது, சையத்புரான், சல்மான் ஆகியோர்தான் எனவும், அவர்களிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது, மூட்டை தூக்கும் தொழிலாளியிடம் லோன் வாங்கி தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.