தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோயில் உத்தாணி ரயில்வே கேட் குடமுரட்டி ஆற்றுப்பாலம் அருகில் இன்று (பிப்.11) மாலை, செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் விரைவு ரயிலில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் தன்னுடன், 11 வயது மற்றும் 7 வயது மதிக்கத்தக்க இரு பெண் குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக இந்த சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாரு தகவல் அளித்து உள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அண்ணுக்குடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரிலும் திருச்சி ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் மகாதேவன், ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, உயிரிழந்த மூவரது உடல்களையும் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து உடற்கூராய்விற்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகள்கள் என்பது தெரிய வந்தது.
மேலும், இவர்கள் கும்பகோணம் நால்ரோடு அருகே உள்ள பொன்னுசாமி நகர் பகுதியில் வசித்துவந்த ஆர்த்தி (வயது 40) மற்றும் அவரது இரு மகள்கள் என்ற விவரம் மட்டும் தற்போது தெரியவந்துள்ளது. இவர்கள் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விவரம் எதுவும் தெரியாத நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சொர்ணா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓஹெச்இ பழுதால் ரயில் சேவை பாதிப்பு!