ETV Bharat / state

திருமண ஆசை காட்டி ஏமாற்றிய ஓனர்.. 'செத்து போ' என சொன்ன இன்ஸ்பெக்டர்.. 37 வயது பெண்ணின் மரண வாக்குமூலம்..! - kanyakumari woman suicide case - KANYAKUMARI WOMAN SUICIDE CASE

நாகர்கோவில் அருகே நிறுவன உரிமையாளர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றியதாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 6:00 PM IST

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் 37 வயதான பெண். இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நாகர்கோவில் பகுதியில் உள்ள எரிவாயு விநியோகிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று உள்ளார். அங்கு வேலை அளித்த உரிமையாளர் நவனித் (32) இவருடன் நெருங்கி பழகி திருமண ஆசை காட்டி, அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் உரிமையாளரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நெருக்கடி கொடுத்த நிலையில், அவரை நிறுவனத்தில் இருந்து நீக்கி உள்ளார்.

இதனால் மனமுடைந்த பெண் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்த பெண் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர், திடீரென இவரை வெளியேற்றி உள்ளார். இதற்கும் எரிவாயு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

இதனால் நிர்கதியான அந்த பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்பாக சிகிச்சையில் இருக்கும் போது, அந்த பெண்ணிடம் காவல் துறை அதிகாரி ஒருவர் வீடியோ வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் எரிவாயு நிறுவன உரிமையாளர் நவனித் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த போது வடசேரி காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் தன்னை தரக்குறைவாக பேசியதோடு 'செத்துப் போ' என தற்கொலை செய்ய தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: டீ போட்டு கொடுத்த பக்கத்துக்கு வீட்டு பெண்.. இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்.. பரபரப்பான எட்டயபுரம்!

மேலும், தனது வீட்டில் உரிமையாளர் தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றியதால், பத்து நாட்களாக குடியிருக்க இடமின்றி பரிதவித்ததாகவும், இதனால் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறி உள்ளார். மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்திலும், அவர் வீடியோவில் பேசிய விவகாரத்தை குறிப்பிட்டு எரிவாயு நிறுவன உரிமையாளர் அவரது நண்பர் மற்றும் வடசேரி காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பெண்ணின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியதோடு, பெண்ணின் சடலத்தை வாங்கவும் மறுத்து உள்ளனர்.

இதனால் பெண்ணின் சடலம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.