ETV Bharat / state

“தவணை வாங்காமால் போகமாட்டேன்..” பெண் தற்கொலையின் முழுப் பின்னணி என்ன? - Woman Suicide Issue In Perambalur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 1:51 PM IST

Woman Suicide Issue: பெரம்பலூர் அருகே தவணை பணம் செலுத்தும் வரையில் வீட்டை விட்டுச் செல்ல மறுத்து தனியார் நிதி நிறுவன ஊழியர் வீட்டிலேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்த காரணத்தால், பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்த உறவினர்கள்
உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்த உறவினர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

பெரம்பலூர்: எளம்பலூர் எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி ராணி (40). இவர்களுக்கு முனியப்பன் என்ற 21 வயதுடைய ஒரு மகனும் உள்ளார். முனியப்பன் ஸ்டீல் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். மேலும், கணவரை இழந்த ராணி, குடும்ப வறுமையின் காரணமாக கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், ராணி பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.50,000 கடன் வாங்கி இருந்ததாகவும், தொடர்ந்து 4 மாதங்கள் கட்டியுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதம் பணம் கட்டாததால், அந்த நிதி நிறுவனத்தின் ஊழியர் சரவணன் (24) என்பவர் ராணியின் செல்போனை பிடுங்கிச் சென்று விட்டதாகவும், இதனை அடுத்து ராணி பணம் கட்டிய பின்னர் செல்போனை திருப்பிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், நேற்றைய மும்தினம் (ஆக.02) காலை 8 மணிக்கு இந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி கட்ட வேண்டிய தவணைத் தொகையை வசூல் செய்ய ராணியின் வீட்டிற்கு வந்த சரவணன், தவணை பணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு ராணி தற்போது பணம் இல்லை எனவும், மாலையில் பணம் கட்டி விடுவேன் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து, நேற்றைய முன்தினம்மதியம் 2 மணி அளவில் சரவணன் ராணியின் வீட்டிற்குச் சென்று பணத்தை கட்ட சொல்லி கேட்டுள்ளார். யாரிடமாவது பணத்தை வாங்கி வந்து மாலைக்குள் கட்டி விடுகிறேன் என்று ராணி கூறியதாகவும், ஆனாலும் தனியார் நிதி நிறுவன ஊழியரான சரவணன் பணத்தை கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வேன் எனக் கூறி பிடிவாதமாக அங்கிருந்து செல்லாமல் ராணி வீட்டிலேயே அமர்ந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அன்று மாலை 4 மணி அளவில் தனது வீட்டிலேயே ராணி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்கொலைத் தடுப்பு உதவி எண்
தற்கொலைத் தடுப்பு உதவி எண் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், நிதி நிறுவன ஊழியரான சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 108 (இந்திய தண்டனைச் சட்டம் 306) கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை பொதுமக்களை மிரட்டி வசூலித்து வரும் செயலைக் கண்டித்தும், தாய் தந்தையரை இழந்து வாடும் முனியப்பனுக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அருப்புக்கோட்டை அருகே புளியமரம் மீது கார் மோதி விபத்து; 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.