ETV Bharat / state

முடிவுக்கு வந்த மோதல்; கட்டிப்பிடித்து சமாதானமான காவலர் - நடத்துநர்.. வைரலாகும் வீடியோ! - Police Vs TNSTC issue

policemen - conductor issue: காவல்துறையினர் - அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதல் நிகழ்ந்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் மற்றும் நடத்துநர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

காவலர் ஆறுமுகபாண்டியன் மற்றும் நடத்துனர் சகாயராஜ்
காவலர் ஆறுமுகபாண்டியன் மற்றும் நடத்துனர் சகாயராஜ் (Credits: ETV Bharat Tamil Ndu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 4:21 PM IST

திருநெல்வேலி: சமீபத்தில் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஆறுமுகபாண்டியன் என்பவர் பயணச்சீட்டு எடுக்க மறுத்து நடத்துனருடன் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, ஆங்காங்கே போக்குவரத்து காவலர்கள் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் ஆறுமுகபாண்டியன் மற்றும் நடத்துநர் சகாயராஜ் சமாதானம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், "நாம் இருவருமே பொதுத் துறையின் தான் வேலை பார்க்கிறோம். சம்பவத்தன்று நம் இருவருக்குள்ளாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இது போன்ற பிரச்னைகள் நடந்துவிட்டது.

இது சமுக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரவும் விதமாக அமைந்துவிட்டது. இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் நமது இரண்டு துறைகளும் நண்பர்களாக செயல்படுவோம்" என இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பை வெளிப்படுத்தி கட்டி அணைத்துக் கொண்டனர்.

முன்னதாக, கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளார். அதில், "நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் பயணித்த காவலர் ஆறுமுகபாண்டியன் பயணச்சீட்டு எடுக்க மறுத்து நடத்துனருடன் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை இல்லை. அவர்களும் மற்றவர்களைப் போல பயணச் சீட்டு கட்டாயம் எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிக்க, இந்த விவகாரம் காவல்துறை - அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இடையிலான மோதலாக மாறியுள்ளது.

பழிக்குப் பழி தீர்ப்பது போல பல்வேறு விதிமீறல்களை காரணம் காட்டி அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அரசின் இரண்டு முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள் இப்படி பகிரங்கமாக மோதிக் கொள்வது அரசின் செயல்பாட்டையே சீர்குலைத்து விடும். மக்களுக்கு பெரும் துன்பத்தை தரும்.

காவல்துறையினருக்கு குறிப்பாக காவலர்களுக்கு, அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டகால கோரிக்கை. இதை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனாலும், காவலர்களுக்கு இலவச பயணச் சலுகை நடைமுறைக்கு வரவில்லை. இதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம்.

அரசு நிர்வாகம் வெளிப்படையாக, நியாயமாக சட்டத்தின்படி இயங்க வேண்டுமானால் அரசுத் துறைகளில் உள்ளவர்கள் சட்டத்தின்படி நடக்க வேண்டும். ஒரு பிரச்னை வந்த பிறகு, ஒரு தரப்பை பழிவாங்குவதற்காக சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது சரியல்ல.

அப்படியெனில் இதுவரை சட்ட மீறல்களை காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது என்பது தெளிவாகிறது. இப்போது போக்குவரத்து கழகங்களை விட நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டுவதற்காக அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காவல்துறையினர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இதை கண்டுகொள்ளாமல் மவுனமாக வேடிக்கைப் பார்ப்பது, இந்த மோதலை ரசிப்பது போல இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. அரசு துறைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே நல்லிணக்கம் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், யார் விதிகளை மீறினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழிவாங்குவதற்காக மட்டும் நடவடிக்கை எடுக்க கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு காவல்துறையினர் - அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி அரசு பேருந்துகளில் காவல்துறையினருக்கு இலவச பயணச் சலுகை வழங்க வேண்டும்" என வலியிறுத்தி இருந்தார்.

இதையும் படிங்க: ராகுல் - சோனியா செல்பி முதல் மெகபூபா முப்தி தர்ணா வரை 6-ஆம் கட்டத் தேர்தல் அப்டேட்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.