ETV Bharat / state

காவலரை ஆபாச வார்த்தைகளால் பேசும் வழக்கறிஞர்.. நீதிமன்றத்திலேயே அரங்கேறிய சம்பவம்! - lawyer threatening to kill - LAWYER THREATENING TO KILL

Lawyer Threatening To Kill: திருப்பத்தூரில் வழக்கு சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்ட இருவரை ஆஜர்படுத்த வந்த காவலருக்கும், குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் ஆதரவாக வாதாட வந்த வழக்கறிஞருக்கும் நீதிமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வழக்கறிஞர் சுரேஷ்
வழக்கறிஞர் சுரேஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 6:46 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை எம்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி மஞ்சு. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், மஞ்சு சொந்தமாக ஷிப்ட் டிசையர் கார் வாங்கி உள்ளார்.

வழக்கறிஞருக்கும், காவலருக்கும் வாக்குவாதம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், இதனை சில மாதங்களுக்கு முன்பு தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் சாய்பாபா நகர் பகுதியைச் சேர்ந்த பைரோஸ் கான் என்பவர்களிடம் ரூ.1 லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளார். இதனை இருவரும் கூட்டு சேர்ந்து போலியாக பத்திரம் தயார் செய்து, மாற்று நபருக்கு ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து மஞ்சு அடமானம் வைத்த நபர்களிடம் கேட்கும் பொழுது, உனது காரை தர முடியாது என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், தனது காரை இவர்களிடமிருந்து மீட்டுத் தரக்கோரி மஞ்சு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இன்று காலை கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் கான் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது இருவருக்கும் ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் என்பவர், "குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் நீதிபதி கேட்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லை என கூறுங்கள்" என கூறியுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் குடியரசன், ‘ஏன் இது போல் சொல்லிக் கொடுக்குறீங்க இது தவறு’ என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சுரேஷ், காவலர் குடியரசனை அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதிமன்றத்திலேயே காவலரை ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நீலகிரியிலும் நிலச்சரிவா? ஆட்சியர் கடும் எச்சரிக்கை.. மலை ரயில் சேவை ரத்து! - Nilgiris Ready for rescue operation

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.