ETV Bharat / state

திருச்சியில் சாலை விபத்து: இறந்தவர் உடலை நெடுஞ்சாலையில் வைத்து பொது மக்கள் சாலை மறியல்..! - நெடுஞ்சாலையில் போராட்டம்

Trichy Highway protest: அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கச் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் உடலை வைத்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

a person died after being hit by a truck people left his body on the road and protest affecting traffic In Trichy
திருச்சியில் சாலை விபத்தில் இறந்தவர் உடலை நெடுஞ்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 11:29 PM IST

திருச்சியில் சாலை விபத்தில் இறந்தவர் உடலை நெடுஞ்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லணை சாலை இணையக்கூடிய பகுதியில் சாலையைக் கடந்து செல்லக் கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி இரவு திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் (24). இவர் ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடித்து வீடு திரும்பும் போது சஞ்சீவி நகர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை டூவீலரில் கடக்க முயன்ற போது, சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் விக்னேஷ் தலையில் அடிபட்டுப் பலத்த காயமடைந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.

பொதுமக்களின் கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளுக்குக் கொண்டு சென்று தீர்வு காணப்படும் என போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே தங்களது கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ளாமல் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உறவினர்கள் விக்னேஷின் உடலைத் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணாவிட்டால் போராட்டத்தைக் கைவிடமுடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து வருவாய்க் கோட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த போராட்டத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டு புறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. சஞ்சீவி நகரிலிருந்து சென்னை செல்லும் மார்க்கம், மதுரை செல்லும் மார்க்கத்திலும் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் நீண்ட நேரம் காத்து இருந்தன. அதன்பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டக்காரர்கள் களைந்து சென்றனர்.

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ஒழிப்போம் என கூறவில்லை - அமைச்சர் முத்துசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.