ETV Bharat / state

காதலியுடன் எடுத்த புகைப்படம், வீடியோக்களை வைத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்! - காதலன் கைது! - A PERSON ARRESTED

சென்னையில் காதலியுடன் ஏற்பட்ட நெருக்கத்தின்போது எடுத்த போட்டோ, வீடியோக்களை வைத்து ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சதீஷ்
கைது செய்யப்பட்ட சதீஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2024, 8:33 PM IST

சென்னை : சென்னை, பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த 3 மாதங்களுக்கு பின்னர், சதீஷ்குமார் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், கூட வேலைப் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அப்பெண்ணை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வடபழனியில் ஆந்திர இளைஞரை கடத்திய மர்ம கும்பல்..2 பேரை கைது செய்து போலீசார் அதிரடி!

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு முன்பே இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தனிமையில் சந்திக்கும்போது அதனை சதீஷ் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அதனை வெளியிடுவதாக ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக அப்பெண் தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பல்லாவரம் போலீசார் சதீஷ் மீது 296(b), 115(2), 64, 318(2), 351(2) ஆகிய ஐந்து பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.