ETV Bharat / state

தேர் அலங்கார பணியின் போது ஒருவர் உயிரிழப்பு.. புதுக்கோட்டையில் சோகம்! - chariot Accident in Pudukkottai - CHARIOT ACCIDENT IN PUDUKKOTTAI

Chariot accident in Pudukkottai: அறந்தாங்கி அருகே கோயில் தேரோட்ட திருவிழா நடைபெற இருந்த நிலையில், தேரின் மேலே கும்பம் ஏற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கயிறு அறுந்து கும்பம் தவறி விழுந்ததில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்துக்குள்ளான தேர்
விபத்துக்குள்ளான தேர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 2:57 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அமைந்துள்ள மாத்தூர் ராமசாமிபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தேரோட்டத் திருவிழா நேற்று மாலை நடைபெற இருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுப் பணிகள் மற்றும் தேரை அலங்கரிக்கும் பணிகள் காலை முதல் நடைபெற்று வந்தன.

அப்போது தேரின் கும்பத்தை மேலே ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அதன் கயிறு அறுந்து விழுந்ததில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மகாலிங்கம் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை அந்த கிராம மக்கள் மீட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டுச் சென்ற போது, மகாலிங்கம் (60) என்பவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

மேலும் நான்கு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டவரின் வீட்டில் பாய்ந்த பெட்ரோல் குண்டு! - youth threw a petrol bomb at house

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.