ETV Bharat / state

மதுபோதையில் வளர்ப்பு நாய் இரும்பு ராடால் குத்திக்கொலை.. சென்னையில் கொடூரம்! - dog murder - DOG MURDER

Dog murder in Chennai: சென்னை போரூர் பகுதியில் மதுபோதையில் நாய் ஒன்றை இரும்பு ராடால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

dog murder
dog murder
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 4:38 PM IST

சென்னை: சென்னை போரூர் கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர், சத்தியசீலன். இவர் கடந்த 11 ஆண்டுகளாக 2 நாய்களை வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் வீட்டின் எதிரில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் பணிபுரிந்து வரும் நபர் ஒருவர், நேற்று மதுபோதையில் சத்தியசீலன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நுழைய முயன்றுள்ளார்.

அப்போது, சத்தியசீலனின் நாய் அவரைப் பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர், தனது கையில் இருந்த இரும்பு ராடால் நாயை கொடூரமாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து நாய் உயிரிழந்தது. நாயின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் நாய் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், நாயைக் கொன்ற நபரை அடித்து தாக்கியுள்ளனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல்துறையினர், நாயைக் கொலை செய்த நபரை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நபர் வீட்டிற்குள் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் நுழைந்தாரா அல்லது நாயைக் கொல்லும் நோக்கத்துடன் நுழைந்தாரா ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நாயின் உரிமையாளர், தனது நாய் கொல்லப்பட்டது குறித்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது நாய் கொல்லப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நாய்க்கே இந்த நிலைமை என்றால், மனிதர்களுக்கும், பெண்களுக்கும் எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்கள்? பொதுமக்களுக்கு பணம்? - கதிர் ஆனந்த் பரப்புரையில் அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்! - DMK Candidate Kathir Anand

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.