தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் குலசேகர கோட்டையை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பசுபதி மாரி (28). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் திருமணமானது. இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவி உள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் ஓட்ட பயிற்சியில் ஈடுபடும்போது, கீழ வல்லநாடு வாட்டர் டேங்க் அருகே செல்லும்போது மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (செவ்வாய் கிழமை) பசுபதி மாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஓட்ட பயிற்சியின் போது காவலர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோமா நிலையில் இருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை.. சென்னை எம்ஜிஎம் மருத்துவர்கள் அசத்தல்!