ETV Bharat / state

வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து! - goods Train Derailed in Vaniyambadi - GOODS TRAIN DERAILED IN VANIYAMBADI

A Goods Train Derailed Near Vaniyambadi: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், பெங்களூரு, கோவை ரயில்வே மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

A Goods Train Derailed Near Vaniyambadi
A Goods Train Derailed Near Vaniyambadi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 8:17 PM IST

Updated : Apr 14, 2024, 10:57 PM IST

A Goods Train Derailed Near Vaniyambadi

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனைத்தொடர்ந்து ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டு உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே பொறியாளர் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சரக்கு ரயிலின் சக்கரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பெங்களூரு மார்க்கமாகச் செல்லக்கூடிய காவேரி எக்ஸ்பிரஸ், கோயமுத்தூர் மார்க்கமாகச் செல்லக்கூடிய நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், பெங்களூரு, கோவை ரயில்வே மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இந்தியாவைப் பிடித்துள்ள மோடி என்ற கிரகணம் விலகி நாடு வெளிச்சம் பெறும்' - பாஜகவை சாடிய சிஐடியூ சௌந்தர்ராஜன் - Lok Sabha Election 2024

Last Updated : Apr 14, 2024, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.