ஈரோடு : தமிழ் சினிமாவில் 1980ம் ஆண்டு காலக்கட்டத்தில் முன்னணி நடிகையான இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தனது நடிப்பு மூலம் பல ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் வைத்திருந்தவர். இவர் முதன் முதலில் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அப்போது முன்னணி நடிகராக இருந்த ரஜினிகாந்த், கமல், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் படங்களில் நடிகையாக நடித்துள்ளார். 17 ஆண்டுகால சினிமா வாழ்வில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை, இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு செப் 23ம் தேதி சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிங்க : தவெக மாநாடு: மதுரையில் விஜய் கட்சி சார்பில் கம.. கம..கிடா விருந்து! - Madurai TVK invites
இந்நிலையில் ஈரோட்டில் நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான குமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் வருடம் தோறும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் ஆதரவற்றோர்க்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை சில்க் ஸ்மிதாவின் 28ம் ஆண்டு நினைவு தினமான இன்று(செப் 23) சில்க் ஸ்மிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் சாலையோரம் இருந்த ஆதரவற்ற 25 பேருக்கு உணவுகளை வழங்கினார். டீக்கடை உரிமையாளர் குமாரின் இச்செயல் அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.