ETV Bharat / state

"முன் செல்லடா.. முன்னே செல்லடா.. தைாியமே துணை.." - சோமேட்டோவில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி நம்பிக்கை நாயகன்! - DISABLED PERSON WORKING AT ZOMATO

பல்வேறு காரணங்களால் மனச்சோர்விற்கு ஆளாகி வாழ்க்கையில் முடங்கி விடுபவர்களின் மத்தியில், மாற்றுதிறனாளி என்பதை மனதிற்கு கொண்டு செல்லாமல் மனதிடத்துடன் சோமேட்டோ-வில் டெலிவரி பாயாக பணியாற்றும் நம்பிக்கை நாயகன் சுரேஷ் குறித்த செய்தி தொகுப்பு.

மாற்றுத்திறனாளி சுரேஷ்
டெலிவரி பாயாக பணியாற்றும் மாற்றுத்திறனாளி சுரேஷ் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2024, 10:55 PM IST

சென்னை: வாழ்க்கையில் எதையேனும் சாதித்து விடமாட்டோமா? என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். அதை நோக்கி ஓட நாம் பல்வேறு துறைகளை தேர்ந்தெடுத்து பயணித்து கொண்டிருக்கிறோம். ஏற்றமோ? இறக்கமோ? எதுவானாலும் தன்நம்பிக்கையின் துணையோடு செல்கிறோம்.

அதிலும் குறிப்பாக, தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமாக கருதும் வகையில், எதாவது தொழிலை செய்து உழைத்து வாழும் மாற்றுத்திறனாளி நண்பர்களின் பங்கு இந்த சமுகத்தில் அளப்பரிய ஒன்று. அந்த வகையில், நம் அவசர நிலையையறிந்து நாம் பசியாற உணவுகளை பக்குவமாய் நம்மிடம் சேர்க்கும் டெலிவரி பாய்ஸ்களில் ஒருவர்தான் சோமேட்டோ-வில் (Zomato) பணியாற்றும் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நண்பர் சுரேஷ்.

சுரேஷின் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

வாழ்வில் ஏற்படும் இடையூறுகளை காரணம் காட்டி மனச்சோர்விற்கு ஆளாகி முடங்கி விடுபவர்களின் மத்தியில், உடலின் ஊனத்தை மனதிற்கு கொண்டு செல்லாமல் மன திடத்துடன், வாழ்வை தைரியத்துடன் மழை, வெயில், குளிர், நேரம் என்று எதனையும் பொருட்படுத்தாமல் குடும்ப நலன், இலக்கு என்று அதை நோக்கி எதிர்நீச்சல் போட்டு பயணிக்கும் சுரேஷின் நெகிழ வைக்கும் பயணம் குறித்து நமது ஈ டிவி பாரத் தமிழ் ஊடகத்தின் செய்தியாளர் யோகேஸ்வரன் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய சுரேஷ், "எனக்கு சொந்த ஊர் தேனி. ஆனால், எனது சிறு வயதிலேயே குடும்பத்தோடு சென்னையில் குறியேரிவிட்டோம். 5 வயதில் எனக்கு போலியோ நோய் வந்துவிட்டது. சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சிறு வயதில் சிகிச்சை பார்த்தோம்.

ஆனால், அப்போது இருந்த சூழ்நிலைக்கு என் குடும்பத்தால் மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்து வர முடியவில்லை. அதன் பின்னர் சில காலங்கள் கழித்து மருத்துவமனையில் சோதனை செய்தபோது, 'என்னுடைய மூட்டு விலகிவிட்டதனால், மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்ய முடியாது' என்று கூறிவிட்டனர்.

நான் 9 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போதே குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை இடை நிறுத்தம் செய்துவிட்டேன். என்னுடைய அம்மா செடிகளுக்கு தண்ணீர் விடும் வேலை பார்க்கிறார். அப்பா மற்றும் அண்ணன் இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டனர். தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கிறோம்.

இதையும் படிங்க: ஐஐஎம் போட்டியில் சாதித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்; இவர்களின் பிசினஸ் மாடல் என்ன?

நம்பிக்கையே தாரக மந்திரம்: வேலை செய்தால்தான் பணம் கிடைக்கும் இல்லையென்றால் ஒன்றும் கிடைக்காது, நமக்கு எத்தனை பேர் தினமும் உதவி செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவர் இரண்டு நாள்கள் நமக்கு டீ வாங்கி கொடுப்பார், அதன் பின்னர் என்ன தினமும் கேட்கிறார் என்று மனதில் தோன்றும். நாம் யாரிடமும் கை கட்டி நிற்க கூடாது.

பொதுவாக நான் எப்பொழுதும் என்னால் முடியாததை முடியும் என்று நினைப்பேன். அதனாலேயே, என்னை யாராவது இது உன்னால் செய்ய முடியாது என்றால் அதை செய்வதற்காகவே அந்த வேலையை முயற்சித்து பார்ப்பேன். அது போலத்தான், இந்த சோமேட்டோவில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்கு இந்த வேலையில் சேர்ந்தேன்.

இதற்கு முன்பு மோட்டார் நிறுவனத்திலும், பேப்பர் போடும் நிறுவனத்திலும் வெகு நாட்கள் பணிபுரிந்தேன். ஆனால், அங்கு வருமானம் அந்த அளவிற்கு எனக்கு கிடைக்கவில்லை, அதன் காரணமாகவும் சோமோட்டோவை தேர்வு செய்தேன்.

பேட்டரி வண்டி vs பெட்ரோல் வண்டி: வேலைக்காக நான் தற்போது பயன்படுத்தும் பேட்டரி வண்டியானது கொஞ்சம் தூரம் சென்று விட்டால் நான் பயந்து, பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிக்கடி சார்ஜ் இறங்கி கொண்டே இருக்கும். பக்கமாக டெலிவரி செய்வதாக இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால், தூரமாக செல்லும் போது சார்ஜ் இறங்கிவிடுமோ என்ற பயம் உள்ளது. இதுவே, பெட்ரோல் வண்டியாக இருந்தால் எளிதில் சென்று வந்துவிடலாம்.

நான் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரையிலும், அதன் பின்னர் வண்டியை சார்ஜ் செய்வதற்கு சற்று இடைவெளி விட்டு, மீண்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சோமேட்டோவில் வேலை பார்க்கும் நேரமாக உள்ளது. ஆனால், இதுவே குறைவான நேரம் தான், பெட்ரோல் வண்டியாக இருந்தால் இன்னும் அதிக நேரம் வேலை பார்ப்பேன்.

மழை காலங்களிலும் நான் சோமேட்டோ ஓட்டுவதை நிறுத்தவில்லை, சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் ஆனால் அதை நான் பொருட்படுத்த மாட்டேன், இடுப்புக்கு மேல் தண்ணீர் இருந்தாலும் வண்டி அதில் நன்றாக இயங்கும், சில சமயங்களில் என்னுடைய சோமேட்டோ நண்பர்கள் எனக்கு உதவுவார்கள். வண்டி எங்கையாவது சாதாரணமாக நிறுத்தினால் கூட அந்த வழியே செல்லும் யாராக இருந்தாலும் உடனே என்னிடம் வந்து வண்டி ஏதும் பழுதாகி விட்டதா என்று கேட்பார்கள்.

இதையும் படிங்க: உறுப்பு மாற்று சிகிச்சையில் முதலிடம்: அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர் பகிர்ந்த தகவல்கள்!

பன்முகம் கொண்ட நபர்கள்: நான் உணவு டெலிவரி செய்யும் போது குழந்தைகள் வைத்திருப்பவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர்கள் மாடி வீட்டில் குடியிருந்தாலோ, அல்லது வெளியே வருவதற்கு ஏதேனும் பிரச்சனை உள்ளது என்றாலோ நானே என்னுடைய கம்பினை ஊன்றி மாடிக்கு சென்று உணவை டெலிவரி செய்துவிட்டு வருவேன். மற்ற அனைவரும் என் நிலைமையை புரிந்து கொண்டு அவர்களே வந்து என்னை வண்டியை விட்டு கீழே இறங்க விடாமல் தங்கள் உணவை வாங்கி செல்வார்கள்.

ஆனால் சில நேரங்களில், ஒரு சில ஹோட்டல்களில் உணவு பொருளை தவறாக வைத்துவிடுகின்றனர், ஒரு சில நேரம் ஒன்றுமே இல்லாமலும் இருந்திருக்கிறது. அதற்கு வாடிக்கையாளர்கள் என்னிடம் சண்டை போடுவார்கள், திட்டுவார்கள். எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று சொன்னாலும் புரியாமல் என்னை திட்டியிருக்கிறார்கள்.

சுரேஷின் விருப்பமும் கோரிக்கையும்: பெரும்பாலும் வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கேகே நகர் போன்ற தூரமான பகுதிகளுக்கு ஆர்டர் வரும், நான் தயங்காமல் சென்று வருவேன். தினமும் 600 ரூபாய் அல்லது 700 ரூபாய் எனக்கு கிடைக்கும். இதற்கு மேல் எனக்கு சம்பாதிப்பதற்கு ஆசை தான், ஆனால் இந்த வண்டியை வைத்து என்னால் சம்பாதிக்க முடியாது. பெட்ரோல் வண்டி இருந்தால் கண்டிப்பாக நிறைய சம்பாதிப்பேன்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இவனால் எப்படி சம்பாதிக்க முடிகிறது என்று ஆச்சரியமாக கேட்பார்கள், ஆனால் நானும் எல்லோரையும் போலத்தான் சம்பாதிக்கிறேன். முடியும் என்று நினைத்தால் எல்லாமே முடியும். தூரமாக டெலிவரி ஆர்டர் வரும் போதெல்லாம் முதலில் கவலை பட்டேன். ஆனால் தற்போது எவ்வளவு தூரமாக இருந்தாலும் பக்கமாக நினைத்துக்கொள்வேன்.

பெட்ரோல் வண்டி வேண்டும் பல வருடங்களாக விண்ணப்பித்து வருகிறேன். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியரையே நேரில் சந்தித்தேன். வண்டி தருவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தனர். ஆனால், எனக்கு இன்னும் வண்டி வரவில்லை. அரசு எனக்கு பெட்ரோல் வண்டி மட்டும் கொடுத்து உதவினால் என்னுடைய அன்றாட வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்து தனது பேச்சை முடித்து கொண்டு அடுத்த டெலிவரிக்கு புறப்பட்டு சென்றார் நம்பிக்கை நாயகன் சுரேஷ்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.